ரெயின்கோட்
குறுங்கதை சம்பத் தனது ஏழு வயதில் முதன்முறையாக ரெயின்கோட் அணிந்த ஒருவரைக் கிராமத்தில் கண்டான். அடைமழைக்காலமது. மண்வாசனையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மழைபெய்யப்போகும் முன்பு எழும் வாசனை ஒருவிதம். மழை விட்ட பின்பு வெளிப்படும் வாசனை வேறுவிதமாக இருக்கும். அது மழை வாசனையில்லை. மண்வாசனை என்பார் தாத்தா. இருக்கட்டுமே. மண்ணை அவ்வளவு வாசனை மிக்கதாக மழையால் தான் முடியும். ஊரைச் சுற்றி மழைமேகம் கருகருவெனத் திரளுவதைக் காண அழகாக இருக்கும். மழைவட்டம் போட்டிருச்சி என்று மக்கள் மகிழ்ச்சி …