Month: June 2024

இரண்டு பாதைகள்

இயக்குநர் மிருணாள் சென்னைப் பற்றிய திரைப்படம் Chalchitra Ekhon. அஞ்சன் தத் இயக்கியுள்ளார். 1981ம் ஆண்டு மிருணாள் சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சல்சித்ரா, இப்படத்தில் அஞ்சன் தத் கதாநாயகனாக அறிமுகமானார். வெனிஸ் திரைப்படவிழாவில் அவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் சல்சித்ரா திரையிடப்பட்ட போதும் இந்தியாவில் திரையிடப்படவில்லை. இந்தப் படத்தில் கிடைத்த புகழால் அஞ்சன் தத் தொடர்ந்து கலைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். இசையில் இருந்த ஆர்வம் காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். இன்று …

இரண்டு பாதைகள் Read More »

காஃப்கா உரை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதனைக்குறிக்கும் வகையில் சென்னையிலுள்ள, Goethe-Institut சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 4 மாலை ஆறுமணிக்கு காஃப்காவின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து உரை வழங்குகிறேன். அத்துடன் காஃப்கா குறித்த உரையாடலில் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்வில் ப.சேரலாதன், ரம்யா ராமஸ்வாமி கலந்து கொள்கிறார்கள். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• நாள் : 4. ஜூலை 2024 நேரம்: மாலை 6-7pm இடம்: கோதே இன்ஸ்டிடியூட் …

காஃப்கா உரை Read More »

விருதுப்பட்டியலில்

2024 Valley of Words Book Awards இறுதிப்பட்டியலில் எனது சிறுகதைத் தொகுப்பு The Man Who Walked Backwards and Other Stories இடம் பெற்றுள்ளது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Valley of Words என்பது டேராடூனில்  நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவாகும்.

சிறிய மச்சம்

கவாபத்தாவின் “The Mole” சிறுகதையில் கணவனைப் பிரிந்து வாழும் சயோகோ என்ற இளம் பெண் தனது மச்சத்தைப் பற்றிய நினைவுகளைக் கடிதமாக எழுதுகிறாள். நான் மச்சத்தைப் பற்றி ஒரு கனவு கண்டேன் எனக் கதை துவங்குகிறது ஒருவர் ஏன் மச்சத்தைக் கனவு காண வேண்டும். என்ன கனவாக இருக்கும் என்று யோசிக்கையில் கதை கனவைப் பற்றியதாக இல்லாமல் மச்சம் உள்ள பெண் அதை எப்படி உணருகிறாள் என்பதைப் பற்றியதாக  விரிவு கொள்கிறது. தனது தோள்பட்டைக்கு மேல் வலது …

சிறிய மச்சம் Read More »

பார்வையற்ற ஓவியர்

திறந்த ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில், கடலை நோக்கியபடி மூன்று உருவங்கள் காணப்படுகின்றன. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்கள் உபயோகப்பட்டுள்ள விதம் மற்றும் உருவங்களின் தனித்தன்மை நம்மை வசீகரிக்கிறது. பிரிட்டிஷ் ஓவியர் சர்கி மான் (Sargy Mann) வரைந்த இந்த ஓவியத்தைக் காணும் போது இது பார்வையற்றவர் வரைந்த ஓவியம் என்று நினைக்கமுடியவில்லை. பொதுவாகப் பார்வையற்றவர்கள் என்றால் அவர்களால் நிறத்தை பிரித்து அறிந்து கொள்ள முடியாது என்றே பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கிறது. ஆனால் போர்ஹெஸ் போன்ற பார்வையற்ற …

பார்வையற்ற ஓவியர் Read More »

இரண்டு பார்வைகள்

“அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள் கோ.புண்ணியவான். மலேசியா அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது. அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார். இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது. அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. …

இரண்டு பார்வைகள் Read More »

கவிதா சொக்கலிங்கம் -75

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களின் 75ம் ஆண்டு விழா சென்னையில் ஜுன் 22 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன் இடம் : முத்தமிழ் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கம். இராஜா அண்ணாமலைபுரம். சென்னை. 28 நாள் : ஜுன் 22 சனிக்கிழமை மாலை 5 மணி

காதலின் முடிவு

ஏதென்ஸில் நகரில் நடக்கும் மூன்று காதல்கதைகள். ஒன்று அகதி இளைஞனின் காதல். மற்றொன்று நடுத்தர வயதுக்காரனின் காதல். மூன்றாவது வயதான இருவரின் காதல். மூன்றும் ஒன்று சேரும் புள்ளி வியப்பளிக்கிறது. கதை இணையும் இடத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. Worlds Apart 2015ல் வெளியான கிரேக்கத் திரைப்படமாகும் கிறிஸ்டோஃபோரோஸ் பாபகாலியாடிஸ் இயக்கியுள்ளார் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலும் டாப்னே இளம் பெண்ணுக்கும் சிரிய அகதி ஃபரிஸ்க்கும் இடையே ஏற்படும் காதலின் வழியே சமகால அரசியல் மற்றும் அகதிகளின் …

காதலின் முடிவு Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் மற்றும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அவை புதுவை. சென்னை, திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராவ் தனது தியேட்டர் லேப் மூலம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்தினார் தற்போது வெளி ரங்கராஜன் மரண வீட்டின் குறிப்புகள் நாடகத்தை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தியுள்ளார். தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினேன். மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் புதுவை …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம் Read More »

அப்பாவின் வருகை.

புதிய சிறுகதை. 2024 சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார். குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை. தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற …

அப்பாவின் வருகை. Read More »