மிதக்கும் காதலர்கள்
மார்க் சாகலின் ஓவியங்கள் கதை சொல்லக் கூடியவை. அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதைப் போல அவரது ஓவியத்தில் மறைத்துள்ள கதைகளையும் நம்மால் படிக்க முடியும். அவை நினைவின் சிதறிய வடிவங்கள். மார்க் சாகலை மகிழ்ச்சியின் ஓவியன் என்றே சொல்வேன். பிராயத்தின் கனவுகள் போன்ற காட்சிகளையே தொடர்ந்து வரைந்திருக்கிறார். தனது நினைவுகளையும் கனவினையும் ஒன்று சேர்த்து ஓவியமாக்குகிறார். அவரது ஓவியத்தில் பசு நீலநிறமாக இடம்பெறுகிறது. ஆடு வயலின் வாசிக்கிறது. மனிதர்கள் வானில் பறக்கிறார்கள். ஆகாசமும் பூமியும் இடம் மாறியிருக்கின்றன. அவரது …