Month: July 2024

புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில்

புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன. இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காஃப்காவின் சுழலும் தலை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். காஃப்காவின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக நான் எழுதிய கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. (28.7.24) தமிழ் இந்து நாளிதழுக்கும் மண்குதிரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம். விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன். கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. …

கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

காந்தியின் கடைசி பயணம்

மகாத்மா காந்தியின் குண்டு துளைத்த உடலை The Last Journey Of Gandhi என்ற ஆவணப்படத்தில் காணும் போது மனம் கலங்கிவிட்டது. ரத்தக்கறை படிந்த காந்தியின் உடை மற்றும் அவரது உடலுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிகளை இதில் காணலாம் அவரது கடைசி நாளின் சாட்சியாக உருவாக்கபட்ட இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது. பத்து நிமிஷங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் யூடியூப்பில் காணக்கிடைக்கிறது The Last Journey Of Gandhi

அநீதியிலிருந்து தப்பித்தல்

ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரவணிகன் நாடகத்தில் நீதி சொல்வதற்காகப் போர்ஷியா ஆண் உருவம் கொள்கிறாள். ஷைலாக்கிற்கு நீதி உரைக்கிறாள். வீடு திரும்பிய பின்பே அவளது கணவனுக்கு உண்மை தெரியவருகிறது. நெருக்கடியின் போது பெண் ஆணாக உருக் கொள்வதை இலக்கியத்தில் நிறையவே காணமுடிகிறது. Prayers for the Stolen படத்தில் போதைப் பொருள் கும்பலிடமிருந்து தனது மகளைக் காப்பாற்றிக் கொள்ள ரீட்டா அவளது தலைமுடியை வெட்டி ஆணைப் போல வளர்க்கிறாள். அனா என்ற அந்தச் சிறுமியின் பார்வையில் ஒபியம் விளையும் …

அநீதியிலிருந்து தப்பித்தல் Read More »

கோவை புத்தகக் கண்காட்சி

தேசாந்திரி பதிப்பகம் கோவை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 9. ஜுலை 26 (26.07.2024) வெள்ளி முதல் 28 ஞாயிறு வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் வாசகர்கள், நண்பர்கள் தேசாந்திரி பதிப்பக அரங்கில் சந்திக்கலாம். புதிய வெளியீடுகள் :

பிபி.ஸ்ரீநிவாஸ் பாராட்டு

எனது விரும்பிக் கேட்டவள் சிறுகதை பி.பி.ஸ்ரீநிவாஸின் ரசிகையைப் பற்றியது. இந்தக் கதையை படித்துவிட்டு பி.பி.ஸ்ரீநிவாஸ் எனக்கு விருந்து கொடுத்துப் பாராட்டினார். விகடனில் வெளியான இக்கதையினை நூறு பிரதிகள் ஜெராக்ஸ் எடுத்து பலருக்கும் அனுப்பி வைத்தார். பின்பு அதனை சிறுவெளியீடாக அவரே வெளியிட்டார் அதன்பிறகு அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். திரையுலக அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு இசைமேதை. பத்து மொழிகள் அறிந்தவர். விரும்பிக் கேட்டவள் சிறுகதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நேற்று …

பிபி.ஸ்ரீநிவாஸ் பாராட்டு Read More »

அக்ஞேயாவின் முகங்கள்

புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், கவிஞர் அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன் அக்ஷயா முகுல் எழுதிய Writer, Rebel, Soldier, Lover: The Many Lives of Agyeya 800 பக்கங்கள் கொண்டது. விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இந்த நூலின் கடைசி 175 பக்கங்கள் பின்குறிப்புகள் மற்றும் உதவிய நூல்களின் பட்டியல் உள்ளது இவ்வளவு பெரிய பட்டியலை இதற்கு முன்பு எந்த வாழ்க்கை வரலாற்று நூலிலும் கண்டதில்லை. அக்ஷயா முகுல் இந்நூலை எழுதுவதற்குச் சிறப்பு நிதிநல்கை …

அக்ஞேயாவின் முகங்கள் Read More »

ஒப்லோமோவின் கனவுகள்

A Few Days from the Life of I.I. Oblomov 1980 வெளியான ரஷ்யத் திரைப்படம். Nikita Mikhalkov இயக்கியது இவான் கோன்சரோவ் எழுதிய ஒப்லோமோவ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. ரஷ்ய பிரபுத்துவத்தினைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நாவலை கோன்சரோவ் எழுதியிருக்கிறார். மேடை நாடகம் போலவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காட்சி அமைப்புகள் மற்றும் நடிப்பு இரண்டும் மேடையில் காண்பது போலவே இருக்கிறது. இலியா இலிச் ஒப்லோமோவ் முப்பது வயதுக்குக் குறைவானவர், நடுத்தர உயரம் …

ஒப்லோமோவின் கனவுகள் Read More »

எகிப்தில்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள பதிப்பகம் இதனை வெளியிடுகிறது