அனாவின் வகுப்பறை
ஹங்கேரியின் சிறிய நகரமென்றில் பள்ளி ஆசிரியராக இருக்கிறாள் அனா பாஷ். 150 வருடப் பாரம்பரியம் கொண்டது அப்பள்ளி. அங்கே இலக்கியம் பயிற்றுவிக்கும் அவளுக்கு நாடகம், கவிதையில் ஆர்வம் அதிகம். தனது வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது உறுதுணையாக உள்ள திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் அறிமுகப்படுத்துகிறாள். பதின்ம வயதினரின் புரிதல்களை விரிவுபடுத்துவதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் தனித்துவமிக்க ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறாள். ஒரு முறை தனது வகுப்பறையில் புகழ்பெற்ற கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் அனா …