இரவின் உருவம்
காலண்டரில் உள்ள நாட்களையும் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நம்பியே உலகம் இயங்குகிறது. ஆனால் கலைஞர்கள் நாளையும் நேரத்தையும் தனது கற்பனையின் வழியே மாற்றிக் கொள்கிறார்கள் புதிய தோற்றம் கொள்ளச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் போலக் கலைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். கடந்தகாலம் என்ற சிறுசொல் எவ்வளவு பெரிய வாழ்க்கையை உள்ளடக்கியது என உலகம் உணரவில்லை. ஆனால் கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலம் தான் கலைஞனின் முதன்மையான கச்சாப்பொருள். கண்ணாடியில் நாம் காணுவது நமது தோற்றத்தை மட்டுமில்லை. வயதையும் தான் என்று …