பாக்தாத்தின் திருடன்
அலெக்சாண்டர் கோர்டா தயாரித்து மைக்கேல் பாவல் இயக்கிய The Thief of Bagdad திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 1940ல் வெளியான இப்படம் இன்றும் சுவாரஸ்யம் மாறாமல் அப்படியே உள்ளது. படத்தில் அபு என்ற கதாபாத்திரமாக எலிஃபண்ட் பாய் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இந்திய நடிகர் சாபு நடித்திருக்கிறார். 1001 அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அழகாகக் கோர்த்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அரங்க அமைப்பும் படமாக்கப்பட்ட விதமும் இசையும் அற்புதமானது.. தமிழில் வெளிவந்த பாக்தாத் திருடன். அலிபாபாவும் நாற்பது …