எழுத்தரின் சிற்பம்
பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த எழுத்தர் சிற்பம் ஒன்றுள்ளது. இது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. எகிப்தில் உள்ள சக்காராவில் பிரெஞ்சு அகழ்வாய்வாளர் அகஸ்டே மரியட் டால் இந்தச் சிற்பம் கண்டறியப்பட்டது. “சீட்டட் ஸ்க்ரைப்” என்று அழைக்கப்படும் இந்த எகிப்திய வண்ணச்சிற்பம் கல்வியறிவு மற்றும் எழுத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது இந்த எழுத்தரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சிலையை உருவாக்கிய கலைஞரின் பெயரும் தெரியவில்லை பெரும்பாலான எகிப்திய சிற்பங்கள் நிற்கும் நிலையில் சித்தரிக்கபடுவதே வழக்கம். ஆனால் …