நினைவின் உணவகம்.
புதிய குறுங்கதை அந்த மலைநகரில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தணிக்கை செய்வதற்காக அவள் வந்திருந்தாள். கூட்டுறவு சங்க நிர்வாகிகளே அவளது உணவு மற்றும் தங்குமிடத்தைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. அவற்றை அவளே ஏற்பாடு செய்து கொண்டாள். தணிக்கை செய்யச் செல்லும் இடங்களில் மதிய உணவு கிடைப்பது தான் பிரச்சனையாக இருந்தது. சங்க ஊழியர்களில் எவரேனும் அவளுக்காக உணவு வாங்கி வருவதற்காக மலைநகருக்குள் சென்று வந்தார்கள். அதை மட்டும் அவளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் …