பகலில் எரியும் விளக்கு
தாய் தந்தையை நினைவு கொள்வதற்குக் கட்டுரை தான் சிறந்த வடிவம். கதையில் அவர்களை இடம்பெறச் செய்தால் உணர்ச்சிப்பூர்வமாகி விடுகிறார்கள். இயல்பை விட அதிகமாகவோ, குறையாகவோ சித்தரிக்கபட்டு விடுகிறார்கள். கவிதையில் இடம்பெற்றாலோ அரூபமாகிவிடுகிறார்கள். கவிதையில் இடம் பெறும் அன்னை கவிஞனின் அன்னையாக மட்டும் இருப்பதில்லை. இலக்கிய வடிவம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறவினை மட்டுமே சரியாகக் கையாளுகிறது. வெளிப்படுத்துகிறது என்பது எனது எண்ணம். மனிதர்கள் எதை, எப்போது, எதற்காக நினைவு கொள்கிறார்கள் என்பது விநோதமானது. இறந்து போன தனது …