டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) இந்த விழாவில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன. இதில் கவளம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இலக்கியம் என்பது சாதாரண மனிதர்களிடமுள்ள அசாதாரணமானவற்றைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் சாதாரண வார்த்தைகளால் அசாதாரணமான அனுபவமாக மாற்றுவது என்கிறார் பாஸ்டர்நாக். இக்கதைகளும் அதையே மேற்கொள்கின்றன. சதுரங்க விளையாட்டினைப் போலவே …