ஒளியின் கைகள்
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) இந்த விழாவில் ஒளியின் கைகள் என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியாகிறது. இது உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒளி எப்போதும் தூய்மையின், கருணையின், அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அற்புதங்கள் ஒளியால் அடையாளப்படுத்தபடுகின்றன. எல்லா சமயங்களும் ஒளியைக் கொண்டாடுகின்றன. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்குப் புலப்படவும் புரியவும் வைக்கிறது. இருள் என்பது …