பெட்ரோ பரமோ
யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பரமோ நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் Netflix ல் காணக்கிடைக்கிறது. இதே நாவலை மையமாகக் கொண்டு கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட படத்தைப் பார்த்திருக்கிறேன். பெட்ரோ பரமோ லத்தீன் அமெரிக்க நாவல்களில் ஒரு கிளாசிக். இப்படத்தின் இயக்குநர் ரோட்ரிகோ ப்ரிட்டோ ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தைக் காண ஆவலாக இருந்தேன். ருல்ஃபோவின் இந்த நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. இன்று வரை அந்த நாவல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. You will hear the …