எதுவும் குற்றமில்லை
லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளில் மோசமான மேயரின் கதாபாத்திரம் தொடர்ந்து இடம்பெறுகிறது. அங்குள்ள அரசியல் சூழலின் அடையாளமது. Herod’s Law திரைப்படம் அதிகாரத்திற்கு வரும் எளிய மனிதர் எப்படி மோசமானவராக மாறுகிறார் என்பதை விவரிக்கிறது. லூயிஸ் எஸ்ட்ராடா இயக்கிய Herod’s Law மெக்சிகோவின் PRI கட்சியின் ஆட்சியின் போது நடந்த ஊழல் பற்றிய அரசியல் நையாண்டி படமாகும். 1940 களில் சான் பெத்ரோ நகரின் மேயர் மிக மோசமான முறையில் கொல்லப்படுகிறார். அங்கிருந்து படம் துவங்குகிறது. அந்த நகரில் …