துரத்தும் நினைவுகள்
1970களின் மத்தியில் அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தால் நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டே இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது 1976 முதல் 1983 வரை அந்த நாட்டை ஆண்ட பயங்கரமான இராணுவ ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்து விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் நடுக்கடலில் தள்ளிவிட்டு கொல்லப்படுகிறார்கள். அப்படி ஒரு கடற்படை விமானத்தின் விமானியாக இருக்கும் கோப்லிக் இந்த இழிசெயலை செய்யமுடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரை ராணுவ சட்டத்தின் கீழ் …