Month: December 2024

புத்தகத் திருவிழாவில் எனது உரை

சென்னை புத்தகத் திருவிழாவில் ஜனவரி 3 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கதைகளிடம் கற்போம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். புத்தகத் திருவிழா அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. தேசாந்திரி பதிப்பகம் சென்னைப் புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்துள்ளது. ஔவையார் பாதை எனும் ஆறாவது நுழைவாயில் வழியாக வந்தால் அரங்கு எண் 334 மற்றும் 335.

பெட்ரோ பராமோ

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள பெட்ரோ பராமோ நாவலின் அறிமுகக் கூட்டம் ஜனவரி 6 திங்கள்கிழமை மாலை சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கிலுள்ள சிற்றரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். ரூல்போவின் பெட்ரோ பரோமா மற்றும் எரியும் சமவெளி இரண்டு நூல்களையும் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிமுக நிகழ்வில் பா. வெங்கடேசன் எரியும் சமவெளி சிறுகதை தொகுதி குறித்து உரை நிகழ்த்துகிறார். சுபத்ரா இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளார்

எனது பரிந்துரை -1

சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்க கூடிய சில அரிய புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஜிலானி பானு எழுதிய கவிதாலயம் நாவல் மிகச்சிறப்பானது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் கதையை சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் பின்புலத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார். இந்த நூலின் குறைவான பிரதிகள் நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இந்தப் பதிப்பு தீர்ந்துவிட்டால் அவர்கள் மறுபதிப்பு வெளியிட பல ஆண்டுகள் ஆகும். பதேர் பாஞ்சாலி நாவலை எழுதிய விபூதிபூஷண் எழுதிய நாவல். நீண்ட காலத்திற்குப் பிறகு …

எனது பரிந்துரை -1 Read More »

காருகுறிச்சி புத்தக வெளியீட்டு விழா

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்து இசைவிமர்சகர், ஆய்வாளர் லலிதா ராம் எழுதிய காருகுறிச்சியைத் தேடி நூலின் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. ( டிசம்பர் 28 ). சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இசையுலக இளவரசர் ஜி.என்.பி, பேரலையாய் ஒரு மென் ஷட்கம் என இரண்டு முக்கிய நூல்களை லலிதா ராம் எழுதியிருக்கிறார். நான் அவரது கட்டுரைகளை விரும்பி வாசிக்கக் கூடியவன். இசையின் வரலாறு குறித்தும் நிகரற்ற …

காருகுறிச்சி புத்தக வெளியீட்டு விழா Read More »

புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர். நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார். கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது …

புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள் Read More »

டிசம்பர் 25 புத்தக வெளியீடு

நாளை மாலை எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இதில் எமர்சன் பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறேன் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

தேசாந்திரி அரங்கு எண்

48வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எனது அனைத்து புத்தகங்களும் அங்கே கிடைக்கும். எண் 334 மற்றும் 335

தேவதச்சன் புதிய கவிதைத் தொகுப்பு

தேவதச்சனின் புதிய கவிதைத் தொகுப்பு தேதியற்ற மத்தியானம் கெட்டி அட்டை ( Hard Bound ) பதிப்பாக வெளியாகியுள்ளது. முந்தைய பதிப்பில் காணப்பட்ட அச்சுப்பிழைகள் நீக்கப்பட்டு சிறப்புப் பதிப்பாக தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. விலை ரூ 300. சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 334 மற்றும் 345ல் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் •• தேவதச்சனின் 2016 வரையிலான முழுக்கவிதைத் தொகுப்பினையும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. சில தினங்களில் இந்த நூல் வெளியாகும்.

கிதார் இசைக்கும் துறவி

2024ல் கவனம் பெற்ற நூல்களின் பட்டியலை இந்து தமிழ்திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை நூல் இடம் பெற்றுள்ளது.

சாகித்ய அகாதமி விருது

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். பாரதி, புதுமைப்பித்தன், வஉசி என அவரது அரிய பதிப்புப் பணிகள் மற்றும் ஆய்வுகள் சிறப்பானவை. சங்க கவிதைகளைத் தங்கப்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து புதிய வெளிச்சத்தைக் காட்டியவர். அவர் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது