காலம் இதழில்
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இதழில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது
சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி, இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது. வெளியூர்களில் இருந்தும் …