Month: January 2025

மாற்ற முடியாத விஷயங்கள்

இஸ்ரேலிய எழுத்தாளர், அமோஸ் ஓஸின் நேர்காணல்கள் தொகுப்பு. What Makes an Apple?: Six Conversations about Writing, Love, Guilt, and Other Pleasures  இந்த நேர்காணல்களில் தனது எழுத்து, பால்யகால நினைவுகள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நேர்காணலை எடுத்துள்ள ஷிரா ஹதாத் அமோஸை ஆழ்ந்து வாசித்துச் சரியான கேள்விகளை முன்வைக்கிறார். ஓஸின் பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்துக்கு நேராக மறுக்கிறார். அத்துடன் அவரது முந்தைய நேர்காணல்களில் …

மாற்ற முடியாத விஷயங்கள் Read More »

புத்தகத் திருவிழா – நன்றி

சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி, இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது. வெளியூர்களில் இருந்தும் …

புத்தகத் திருவிழா – நன்றி Read More »

பாரோவின் அரியணை

த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்-ஹர் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் உருவாக்கபட்ட திரைப்படம் பாரோ.  போலந்து நாட்டில் தயாரிக்கபட்ட இப்படம் 1966ல் வெளியானது. மூன்று ஆண்டுகள் பெரும்பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும்  பாலைவனக் காட்சிகளுக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பயன்படுத்தபட்டிருக்கிறார்கள இப்படத்திற்காக கலை இயக்குநர் 3000 விக்குள் மற்றும் 3000 ஜோடி காலணிகள், கிட்டத்தட்ட 9000 ஆயுதங்கள் மற்றும் 600  பாரம்பரிய ஆடைகளை உருவாக்கியிருக்கிறார். அது போலவே …

பாரோவின் அரியணை Read More »

மிலன் குந்தேரா நாவல்

செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் வாழ்வின் தாள முடியா மென்மை நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனைப் புகழேந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை புத்தகத் திருவிழாவில் உள்ள காலச்சுவடு பதிப்பக அரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

உதவி தேவை

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும் எனது மின்னஞ்சல் முகவரி writerramki@gmail.com

தேவதச்சன் கவிதைகள்

தேவதச்சனின் முழுக்கவிதை தொகுப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இதில் 2016 வரையிலான அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 8ம் தேதி இந்த நூல் வெளியாகிறது. இதனை சென்னை புத்தகத் திருவிழால் உள்ள தேசாந்திரி பதிப்பக அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகிறது. கவிதை என்பது எதிரெதிர் உண்மைகளின் தழுவல் என்கிறார் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் அதனைத் தேவதச்சனின் கவிதைகளை வாசிக்கும் போது நன்றாக உணர முடிகிறது. தண்ணீரைப் போல நிசப்தமாக, ரகசியமாக, தனக்கான பாதையைத் …

தேவதச்சன் கவிதைகள் Read More »

எனது பரிந்துரை -2

அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். சென்னைப் புத்தகத் திருவிழாவில் நேற்று நிறைய கூட்டம். பலரும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. புத்தகத் திருவிழாவில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் கடையில் வங்கச் சிறுகதைகள். ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி போன்ற சிறந்த நூல்கள் கிடைக்கின்றன. பறவையியலாளர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல் இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலின் சிறப்புப் பதிப்பை நூல் வனம் வெளியிட்டுள்ளது. …

எனது பரிந்துரை -2 Read More »