Month: March 2025

பிரெய்லி புத்தகம்

எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூலை வாசித்த மாணவர்கள் நிறைய பாராட்டுக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இந்த நூல் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று பார்வையற்றவர்களுக்காகப் பிரெய்லி வடிவில் வெளியாகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஆடிட்டர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி ••

சிறந்த கதை

Borderless இலக்கிய இதழ் கடந்த ஆண்டில் வெளியான படைப்புகளில் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்து பாராட்டியிருக்கிறார்கள் எனது The Browless Dolls சிறுகதை அதில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இதன் மொழிபெயர்ப்பாளர் டாக்டர் சந்திரமௌலிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இரு சகோதரர்கள்

அழிசி வலைப்பக்கத்தில் அ.கி. கோபாலன் மற்றும் அ.கி. ஜயராமன் நேர்காணலை ஸ்ரீநிவாச கோபாலன் வெளியிட்டுள்ளார். 1995ல் புதிய பார்வையில் வெளியான இந்த நேர்காணலை எடுத்தவர் குரு. புகைப்படங்களை எடுத்தவர் சுதாகர் ஸ்ரீநிவாச கோபாலன் இதனை மீள்பிரசுரம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். ‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில …

இரு சகோதரர்கள் Read More »

சால் பெல்லோ கேட்ட கதை

யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார். தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு …

சால் பெல்லோ கேட்ட கதை Read More »

இருளுக்கும் ஒளிக்கும் இடையில்

ஜெஸ்ஸி ஐசன்பெர்க்கின் புதிய படமான ” A Real Pain” இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கிறது. அத்துடன் வாழ்க்கையைப் பற்றிய இரண்டு பார்வைகளையும் முன் வைக்கிறது. எது உண்மையான வலி என்பதை விசாரணை செய்கிறது.  இயல்பான நகைச்சுவையும் தேர்ந்த நடிப்பும் கொண்ட இந்தப் படம் யூதப்படுகொலை பற்றிய இந்த தலைமுறையின் புரிதலை அழகாக வெளிப்படுத்துகிறது. டேவிட் மற்றும் பென்ஜி இருவரும் தனது பாட்டி வாழ்ந்த பூர்வீக வீட்டைக் காணுவதற்காகப் போலந்தில் ஒரு சுற்றுப்பயணத்தை …

இருளுக்கும் ஒளிக்கும் இடையில் Read More »

குற்றமுகங்கள் -7 நூபுரன்

மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் ரயில் சேவை ஜூலை 1, 1856 அன்று ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுச் சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்தின் பின்பு வாலாஜாவை அடைந்தது. ரயிலின் வரலாறு இதுவாக இருந்தாலும் ரயிலில் பிறந்த முதல் குழந்தையின் வரலாறு 1894ல் துவங்குகிறது. நூபுரன் தான் ரயிலில் பிறந்த முதல் குழந்தை. அவனது அம்மாவின் பெயர் தனராணி. ஒடும் ரயிலில் நடந்த பிரவசமது. ரயிலில் யார் பிரவசம் …

குற்றமுகங்கள் -7 நூபுரன் Read More »

நாவல்வாசிகள்

இந்து தமிழ் திசை நாளிதழில் நாவல்வாசிகள் என்ற புதிய தொடரை ஆரம்பிக்கிறேன். அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

குற்றமுகங்கள் 6 லாப்பன்

1828 இல் லண்டன் காவல்துறை போலீஸ் கெஜட் என்றொரு பத்திரிகையைத் துவக்கியது அதில் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் தேடப்படும் குற்றவாளிகளின் முழு விவரங்களைச் சித்திரங்களுடன் வெளியிட்டது. அத்துடன் விசித்திரமான குற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய நம்பிக்கைள். சடங்குகள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார்கள். அக்டோபர் 1834ல் வெளியான இதழில் மதராஸ் தொடர்புடைய ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது அது லாப்பனைப் பற்றியது. திருடர்கள் அதிர்ஷ்டத்தை உறுதியாக நம்பினார்கள். எந்தப் பொருளை எந்த நாளில் எந்த நேரத்தில் திருட வேண்டும் …

குற்றமுகங்கள் 6 லாப்பன் Read More »

குற்ற முகங்கள் – 5 மூன்றாந்தரன்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருடர்களுக்கென ஒரு நாடக அரங்கம் மதராஸில் இருந்தது. அதன் நடிகர்கள் யாவரும் திருடர்களே. பார்வையாளர்களும் திருடர்களாகவே இருந்திருக்கக் கூடும். அந்த நாடகம் நடத்தப்படும் இடமும் நேரமும் ரகசியமாக அறிவிக்கபடும். அந்த இரவில் திருடர்கள் ஒன்று கூடுவார்கள். ஆண்களே பெண் வேஷமிட்டு நடித்த அந்த நாடகம் பெரும்பாலும் வேடிக்கையான கதையைக் கொண்டிருந்தது. குறிப்பாக வெள்ளைக்கார துரை மற்றும் அவரது மனைவி அல்லது காதலி பற்றிய கதைகளே நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகங்களை எழுதிய நாடக ஆசிரியர் …

குற்ற முகங்கள் – 5 மூன்றாந்தரன் Read More »

நீளும் கரங்கள்

சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார், இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக …

நீளும் கரங்கள் Read More »