பாரதிய பாஷா விருது
இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எனக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்திய அளவில் சிறந்த இலக்கிய வாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. 2025ம் ஆண்டிற்கான விருதிற்கு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றேன். இது எனது வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ 1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. விருது வழங்கும் விழா 01.05.2025 …