Day: April 15, 2025

ஸ்வரித்தின் கவிதை

அமெரிக்காவில் வாழும் 13 வயதான ஆட்டிச நிலையாளர் ஸ்வரித் கோபாலன் சிறப்பாகக் கவிதைகள் எழுதுகிறார். அவரது ஆங்கிலக் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘Loud Echoes of the Soul’ என அவரது ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறந்த கவிதைக்காக இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் விருதைப் பெற்றிருக்கிறார். அவரது கவிதை ஒன்றின் தமிழாக்கம் பெரியார் பிஞ்சு இதழில் வெளியாகியுள்ளது. நல்ல கவிதை. நேர்த்தியான மொழியாக்கம் ஸ்வரித் இளையராஜா இசையின் மீது தீவிர ஈடுபாடு …

ஸ்வரித்தின் கவிதை Read More »

தூத்துக்குடியில்

எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள் பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக …

தூத்துக்குடியில் Read More »