Month: June 2025

புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா

சிறந்த ஆய்வாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்துள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். சென்னை அடையாறில் உள்ள எம்ஐடிஎஸ் அரங்கில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு (30.6.25) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. புதுமைப்பித்தன் நினைவு நாளில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது. இந்த நிகழ்வில் கமலா விருத்தாசலம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூலான நினைவுத் தீ, மற்றும் தினகரி சொக்கலிங்கம் எழுதிய …

புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா Read More »

வரலாறும் கவிதையும்

சீனாவின் புகழ்பெற்ற மூன்று கவிஞர்களான வாங் வெய், லி பெய், மற்றும் காவ் ஷி வாழ்வை ஒரே திரைப்படத்தில் காண முடிகிறது. 2023ல் வெளியான Chang An என்ற அனிமேஷன் திரைப்படம் சீனக் கலை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலமான டாங் அரசமரபைக் கொண்டாடுகிறது. இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்திற்குள் ஒரு நூற்றாண்டின் வாழ்வைக் காண முடிகிறது. எட்டாம் நூற்றாண்டு சீனாவின் துல்லியமான சித்தரிப்பு. அழகிய நிலக்காட்சிகள். விழாக்கள் மற்றும் போட்டிகள். யுத்தம் நடக்கும் விதம். பழைய …

வரலாறும் கவிதையும் Read More »

உப்பின் குரல்

குஜராத்தின் கட்ச் பாலைவனப்பகுதியில் எப்படி உப்பு விளைவிக்கபடுகிறது என்பதைப் பற்றிய ஆவணப்படம். ஃபரிதா பச்சாவின் மை நேம் இஸ் சால்ட். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. ஆவணமாக்கம் எனப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என அழைக்கபடும் இந்தப் பாலைவனப் பகுதி உப்புக் கனிமங்கள் கொண்ட சதுப்பு நிலமாகும். மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்புகிறது.. அக்டோபரில் தண்ணீர் வடிந்த பிறகு, உப்பு விளைவிக்கும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இங்கே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள். கிணறு தோண்டி …

உப்பின் குரல் Read More »

குற்றமுகங்கள் -17 கோளாம்பி

1828 நவம்பர் 20 அன்று கொச்சி இராஜ்ஜியத்தின் திவான் உத்தராதி தம்பிரானின் பசு திருடு போயிருந்தது. நெற்றியில் சங்கு அடையாளம் கொண்ட அந்தப் பசுவை அவர் மகாலட்சுமியின் அவதாரமாகவே கருதினார். நேத்ரி என்று பெயரிடப்பட்ட அந்தப் பசுவிற்காகவே சொர்க்க மண்டபத்தினைக் கட்டியிருந்தார். பசுவைக் கயிற்றால் கட்டக்கூடாது என்பதற்காக வெள்ளிச்சங்கிலியை அணிவித்திருந்தார். பசு நின்றிருந்த அந்த மண்டபத்தில் காலையும் மாலையும் சாம்பிராணி போடுவார்கள். மண்டபத் தூண்களுக்கு இடையே சேலையால் தடுப்பு உருவாக்கி மணப்பெண்ணைப் பாதுகாப்பது போல வெளியாள் கண் …

குற்றமுகங்கள் -17 கோளாம்பி Read More »

நினைவின் கரையில் நிற்கிறோம்

ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம் மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.

கோமாளியின் ஞானம்

லைம்லைட் சாப்ளினின் மிகச் சிறந்த திரைப்படம். எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறீர்களோ அப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். மருந்தாக வேலை செய்யும். புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை உருவாக்கும். இப்படத்தின் வசனங்களைத் தனியே அச்சிட்டு சிறுநூலாக வெளியிடலாம். படத்தின் ஒரு காட்சியில் சாப்ளின் அரங்க மேடையில் உள்ள ஒரு பூவைப் பறித்துத் தனது பாக்கெட்டிலிருந்து உப்பை எடுத்து அதில் போட்டு ஆசையாக ருசித்துத் தின்னுகிறார். அது தான் சாப்ளினின் முத்திரை. பூவை ஒரு போதும் உண்ணும் பொருளாக நாம் …

கோமாளியின் ஞானம் Read More »

மறைந்திருக்கும் உண்மை

பல்வேறு தேசங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ரகசியமாக மறைந்திருக்கிறது. பல நேரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிராக வெளிப்படுகிறது என்று A Great Divide திரைப்படம் விவரிக்கிறது. பொதுவெளியில் பேசத்தயங்குகிற உண்மையை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீன் ஷிம். இந்தப் படம் பேசும் விஷயங்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் கொரியர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். 2020ல் அமெரிக்காவில் ஆசிய இனத்தவருக்கு எதிராக இனவெறி …

மறைந்திருக்கும் உண்மை Read More »

குற்றமுகங்கள் 16 மண்டே ராணி

மண்டே ராணியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் பந்தயக்குதிரை ஒட்டியள். . அவளது குதிரையின் பெயர் மண்டே. ஆண்கள் மட்டுமே குதிரைப்பந்தய ஜாக்கியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தின் முதல் பெண் ஜாக்கியாக அறியப்பட்டடாள். பிரிட்டனின் குதிரைப்பந்தய விதிகளின் படி பெண்கள் ஜாக்கியாகப் பணியாற்ற இயலாது, இருப்பினும் 1804 ஆம் ஆண்டிலேயே பெண்கள் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு சவாரி செய்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஜான் போவெல் என்ற ஆண் அடையாளத்துடன் ஒரு பெண் ஜாக்கியாகப் பணியாற்றினாள் என்கிறார்கள். ஆனால் அந்த …

குற்றமுகங்கள் 16 மண்டே ராணி Read More »

வானவன்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார். அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை …

வானவன் Read More »

இணைய வழி நிகழ்ச்சி

எனது நூறு புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வு இணைய வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். காலை10,30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. எனது உரையைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். எஸ்.ரா நூறு நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடித்தி முடித்துள்ள முனைவர். சு.வினோத் மற்றும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய அமைப்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி. பேராசிரியர் வினோத்தின் அழைப்பை ஏற்று எஸ்.ரா நூறு நிகழ்வில் …

இணைய வழி நிகழ்ச்சி Read More »