சுமன்
எம்.ஜி. பவேரியா இயக்கத்தில் ஜெயா பாதுரி நடித்துள்ள FTII டிப்ளமோ திரைப்படம் சுமன். 1970ம் ஆண்டு வெளியானது . கறுப்பு வெள்ளையில் அழகான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய கிராமமும் துள்ளியோடும் ஜெயா பாதுரியின் விளையாட்டுதனமும் வசீகரிக்கின்றன. கிராமத்திற்கு வரும் குரங்காட்டி, படம் காட்டுபவர். கோவிலில் சாமி முன்பாக உள்ள காசைத் திருடி ஐஸ் வாங்குவது. தோழி வீட்டிற்குச் சென்று சந்திப்பது, கிராமவீதிகளில் தன்னிஷ்டம் போல சுற்றியலைவது போன்ற காட்சிகள் கடந்த காலத்தின் நினைவைத் தூண்டுகின்றன. பதின்ம வயதில் …