நாவல்கள் - Welcome to Sramakrishnan


‘நாவல்கள்’

காந்தியோடு பேசுவேன் காணொளி

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதையை  வித்யா சுபாஷ் வெகு சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இலக்கிய வாசகர். காந்தியின் குரல். வார்தா காட்சிகள், எனது காந்தி குறித்த உரையின் பகுதி என்று அழகாக இணைத்து இந்தக் கதையைச் சொல்லிய விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒரு கதையைச் சொல்வதற்கு வித்யா சுபாஷ் காட்டியுள்ள அக்கறையும் உழைப்பும் நல்ல முன்னுதாரணம் என்பேன். அவரது கதைகேளு கதைகேளு நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் சிறுகதைகளைத் தொடர்ந்து அறிமுகம் [...]

கார்க்கியின் இளமைப்பருவம்.

எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதியாகச் சோவியத் ரஷ்யாவில் படமாக்கியிருக்கிறார்கள். The Childhood of Maxim Gorky, Gorky 2: My Apprenticeship, Gorky 3: My Universities என 1938ல் வெளியான இந்தப் படங்களைப் பார்த்தேன். இயக்குநர் மார்க் டான்ஸ்காய் இயக்கியது. ஹாலிவுட் படங்களும் ரஷ்ய படங்களுக்கும் தயாரிப்பிலும் கலைவெளிப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை இந்தப் படங்களைக் காணும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ரஷ்யாவில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை மிகுந்த கவித்துவமாக [...]

பால்ய காலத்துச் சித்திரங்கள்

-பதின் நாவல் குறித்த விமர்சனம் கீரனூர் ஜாகிர்ராஜா •• இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் [...]

டோரா ஜெயிக்கிறான்

குத்துச்சண்டை போட்டியினை எப்படி ஒரு சூதாக மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய படம் The Harder They Fall. மார்க் ராப்சன் இயக்கியுள்ளார். போகார்ட் நடித்த கடைசிப்படம். திறமையில்லாத ஒரு குத்துச்சண்டை வீரனை மீடியா எவ்வாறு திட்டமிட்டு நாக் அவுட் நாயகனாக உருவாக்குகிறது என்பதே படத்தின் மையக்கதை. 1956ல் வெளியான திரைப்படம். ஹம்ப்ரி போகார்ட் எடியாக நடித்திருக்கிறார். புட் ஷுல்பெர்க்கின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் எடி வில்லிஸ்ஸைத் தேடி ஒரு நாள் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு [...]

இரவை வாசிப்பவர்கள்

(நடு- இணைய இதழில் வெளியான சிறுகதை) அண்ணாசாலையில் அப்படியொரு புத்தகக் கடை இருக்கிறது என்பதே ஆச்சார்யா சொல்லி தான் ரகுவிற்குத் தெரியும். பலமுறை அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறான். சிவப்பு நிற கட்டிடத்தைப் பார்த்தவுடன் ஏதோ அரசாங்க அலுவலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். எத்தனை புதிய கட்டிடமாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ஒன்று போலவே செயல்படுகின்றன. “அந்தப் புத்தகக்கடையின் பெயர் நைட்ஸ். இரவு ஒன்பதரை மணிக்குத் தான் திறப்பார்கள். விடியும் வரை கடை [...]

குறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.

யஜுசிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி சினிமா பார்த்துத் திரும்பும் போது மாறன் தனது தந்தையும் தாயையும் நினைத்துக் கொண்டான். படத்தில் வரும் பெற்றோர் டோக்கியோவுக்கு வந்ததும் தங்கள் தனிமையை நினைத்துப் பயப்படுகிறார்கள். சொந்த பிள்ளைகளால் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நிராகரிக்கப்படுகிறார்கள். அந்தப் பிள்ளைகளில் ஒருவனைப் போலத் தன்னை உணர்ந்தான். படம் முடிந்து வெளியே வந்த போது மாநகரம் உறங்கியிருக்கவில்லை. வாகன இயக்கம் குறைந்திருந்தது. நடந்தே அறைக்குத் திரும்ப வேண்டும். கோடம்பாக்கம் பாலத்தை ஒட்டிய மேன்ஷன் ஒன்றில் குடியிருந்தான். [...]

குறுங்கதை 56 உலகம் கேட்கிறது.

வாழ்வில் முதன்முறையாக ஒரு ரேடியோ ஸ்டேஷன் முன்பு நிற்கிறோம் என்ற யோசனையோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். அவரது கையைப்பிடித்தபடியே நின்றிருந்தான் அவரது ஒன்பது வயது மகன் பாலு. அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக அவர்கள் நின்றிருந்தார்கள். 1970களில் சில வீடுகளில் தான் ரேடியோ இருந்தது. ராகவன் பர்மாவில் வேலை செய்தவர் என்பதால் அங்கிருந்து வால்வு ரேடியோ ஒன்றை வாங்கி வந்திருந்தார். அந்த வானொலியில் லைட் எரிவதற்கே ஐந்து நிமிஷங்கள் ஆகும். அதன்பிறகு கரகரவெனச் சப்தம் [...]

பறவைகளை அழைத்துச் செல்பவன்.

Spread Your Wings என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன். அழிந்து வரும், காட்டு வாத்து இனம் ஒன்றைக் காப்பாற்ற வேண்டி பறவையியலாளர் கிறிஸ்டியன் ஒரு ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிராகரிக்கிறது. தனது திட்டத்தைச் செயல்படுத்த விரும்பிய கிறிஸ்டியன் அலுவலக முத்திரையைத் திருடி வந்து தானே ஒரு அரசாணை போல ஒன்றைத் தயார் செய்கிறார். அவரது திட்டம், காட்டுவாத்துகளின் முட்டைகளைச் சேகரித்து அந்த வாத்துகள் பிறக்கும் நாளிலிருந்து தானே வளர்த்து அவற்றைப் [...]

குறுங்கதை 44 வழிப்போக்கன்

தொலைவில் காணும் போது அந்த ஊர் மிகச்சிறியதாகவே தெரிந்தது. ஆண்டுக்கணக்கில் இலக்கற்று நடந்து திரிந்த அந்த மனிதன்  சோர்ந்து போயிருந்தான். பசியும் தாகமும் வாட்டின. அந்த ஊரினுள் வந்தவுடன் ஒருவர் கூட அவன் யார் எந்த ஊர் என எதையும் விசாரிக்கவில்லை. மாறாக எங்கள் வீட்டிற்குச் சாப்பிட வாருங்கள் எனப் பலரும் அழைத்தார்கள். ஒரு வீட்டில் சாப்பிடுவதற்கு ஒத்துக் கொண்டான். அந்த வீட்டிலிருந்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய மகனை வரவேற்பது போல ஆசையாக உணவளித்தார்கள். [...]

குறுங்கதை – 4 பெயரற்ற காற்று

அந்தக் காற்றுக்குப் பெயரில்லை. எந்தத் திசையிலிருந்து அக்காற்று துவங்கியது என்றும் தெரியாது. ஆனால் அக்காற்று வீச ஆரம்பித்தவுடன் நகரில் வசித்த எல்லோரது தலைமயிர்களும் தன் கருமை நிறமிழந்து முற்றிலும் வெண்ணிறமாகின. ஆம். பிறந்த குழந்தை உள்ளிட்ட அனைவரது தலைமயிர்களும் ஒரு நிமிஷத்தில் நரைத்துப் போயின. நரையென்பது வயதாகி வருவது தானே. எப்படிப் பள்ளிச்சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு ஒரு நிமிஷத்தில் தலை நரைத்துப் போனது எனக் குழம்பிப் போனார்கள். காற்றால் தான் தலை வெண்ணிறமாகிறது என்பதை அவர்கள் கண்டறிந்த [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: