படித்தவை - Welcome to Sramakrishnan


‘படித்தவை’

எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடர்ந்த வாசிப்பில் தான் வாசிக்கும்
முக்கியப் புத்தகங்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறார்

கால் முளைத்த கதைகள்

விமர்சனம் •• தமிழக அரசின் புதிய பாடநூலில் கால்முளைத்த கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் இந்த நூலை ஆர்வமாக வாசித்து விமர்சனம் எழுதி வருகிறார்கள். இணையத்தில் நான் படித்த ஒரு விமர்சனத்தை பகிர்ந்து தருகிறேன் ••• ஆந்தைக்குத் தூங்குவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரங்கொத்தி ஒன்று [...]

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ [...]

மேற்கின் குரல்

தங்களது மேற்கின் குரல் நேற்றிரவு முடித்தேன்.  சிறிய நூல், அனுபவம் பெரியது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவம்.  அதிகமாக அடிக் கோடுகள்  மற்றும் குறிப்புகள் எடுத்து கொண்ட புத்தகம் இது. ஒரு நாள்  தனிமையின் நூறு ஆண்டுகள் தொடங்கி இருந்தேன். தற்செயலாக Gabriel Garcio Marquez   மற்றும் தனிமையின் நூறு ஆண்டுகள் பற்றிய கட்டுரை இந்நூலில் படித்தேன். அதில் இருந்து மேற்கின் குரல் தொடங்கியது. தனிமையின் நூறு ஆண்டுகள் முடித்து தங்களது Marquez கட்டூரை மறுபடியும் படித்தேன். [...]

போலி மகள்

பெரிமேஸன் துப்பறியும் போலி மகள் என்ற புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இந்நாவலைத் தமிழாக்கம் செய்தவர்கள் பெரிமேஸன் என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு மற்ற எல்லாக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் தாங்களே புதிய பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு வெளியாகும் டப்பிங் படங்களைப் போன்ற டப்பிங் நாவல் போலும். நான்சி என்ற பெண்ணின் பெயரை யசோதா என மாற்றியிருக்கிறார்கள். ஸ்டீவ் என்ற கதாபாத்திரத்திற்குப் பெயர் மோகனசுந்தரம், ஜான் என்பதற்கு மல்லையா, மன்றோ என்பதற்குச் சங்குண்ணி மேனன். [...]

கவிஞனின் நாட்குறிப்பு.

A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். [...]

உருமாறும் புத்தகங்கள்

இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய [...]

சுதந்திர எழுச்சி

ராமநாதபுரம் ஜில்லாவில் 1942ல் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியை அன்றைய ஆங்கிலேய அரசு எப்படி ஒடுக்கியது என்பதைப் பற்றிய சிறுநூல் ஒன்றை வாசித்தேன். ஏ.வி.திருப்பதிரெட்டியார் என்ற தியாகி இதை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப் புத்தகத்தைப் பிரிட்டீஷ் அரசு தடைசெய்திருக்கிறது அதிலிருந்து சில பகுதிகள் தேசதலைவர்களைக் கைது செய்த செய்தி 1942 ஆகஸ்ட் 9ம் தேதி ரேடியோ மூலம் அறிவிக்கபட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். தொழிலாளர்களுக்கும் வேலைக்குப் போகவில்லை. பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எங்கும் [...]

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன், பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், [...]

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும், எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் [...]

ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: