சினிமா - Welcome to Sramakrishnan


‘சினிமா’

அனோடியின் கால்பந்து

Two Half Times in Hell கால்பந்து விளையாட்டினை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமானது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். 1961ல் சோல்தான் ஃபாப்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் சினிமா வரலாற்றில் தனியிடம் பெற்றது. ஏப்ரல் 1944 ல் ஹிட்லரின் பிறந்த நாளை கொண்டாட, ஜெர்மனி ராணுவம் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடத்த விரும்புகிறது. ஜெர்மனி அணிக்கும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள போர் கைதிகளைக் கொண்ட அணிக்கும் இடையில் போட்டி ஏற்பாடு செய்கிறார்கள். இந்தப் போட்டி எவ்வாறு நடைபெற்றது [...]

வஞ்சிக்கும் அழகு

Bitter Rice 1949ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். Giuseppe De Santis இயக்கியுள்ளார் நேர்த்தியான ஒளிப்பதிவும் அழுத்தமான கதையும் சிறந்த நடிப்பும் கொண்ட இப்படம் காலத்தைக் கடந்து இன்றும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. இத்தாலியின் போ பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் அறுவடைக்கும் நடவு நடுவதற்கும் ஒரு ரயில் முழுவதும் பெண்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வேலையாட்களுடன் வால்டர் என்ற திருடனின் காதலியான பிரான்செஸ்கா சேர்ந்து பயணிக்கிறாள். காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே அவள் அந்தக் [...]

இணைந்த கரங்கள்.

Made in Bangladesh என்ற பங்களாதேஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். டாக்காவிலுள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களின் அவல வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய ஆயுத்த ஆடை ஏற்றுமதியாளராகப் பங்களாதேஷ் விளங்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பங்களாதேஷின் ஆயுத்த ஆடைத் தொழில் 19 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை ஆயுத்த ஆடை வணிகம் பெறுகிறது. ஆயுத்த ஆடைத் தொழிலில் 4.4 [...]

எல்லை கடந்து.

17 நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் Nefta Football Club’ 2018ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Yves Piat. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ள இரண்டு சிறுவர்களைப் பற்றியதே கதை. சகோதரர்களான அவர்கள் துனிசிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் அல்ஜீரியாவின் எல்லையில் பாலைவனத்தின் நடுவில் கைவிடப்பட்ட கழுதை ஒன்றைக் காணுகிறார்கள். அந்தக் கழுதை போதை மருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவது. கழுதையில் உள்ள [...]

மறுக்கப்பட்டவனின் குரல்

அலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது. 1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார். செர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே [...]

நான்கு ஜன்னல்கள்.

இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது. சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர். வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் [...]

காதலின் அலைகள்

‘Little England’ (‘Mikra Anglia’) பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கி 2013ல் வெளியான கிரேக்கத் திரைப்படம் ஆண்ட்ரோஸ் தீவைச் சேர்ந்த ஓர்சா மற்றும் மோஷா என்ற இரு சகோதரிகளின் காதல் மற்றும் திருமணத்தைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். படமாக்கப்பட்டவிதம் மிகச்சிறப்பு. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிமோஸ் சார்கெட்ஸிஸ் ஒவ்வொரு காட்சியினையும் ஓவியம் போல உருவாக்கியிருக்கிறார். அடர் வண்ணமும் பீறிடும் ஒளியும் மாறுபட்ட கோணங்களும் வசீகரமாகவுள்ளன. நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் படம் இருபது ஆண்டுக் [...]

டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் [...]

சிறுமியின் கனவு.

தி ரிக்கார்டர் எக்ஸாம் என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். 27 நிமிஷங்கள் ஓடும் அழகான திரைப்படம். 1988 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான யூன்-ஹீ என்ற  மாணவியின் ஆசையைப் பேசுகிறது. பள்ளியில் படிக்கும்  யூன்-ஹீ ஒரு நாள் ரிக்கார்டர் என்ற குழலிசைக் கருவியை வீட்டில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். தன் அம்மாவிற்குப் போன் செய்து அதைப் பள்ளியில் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்வதில் படம் துவங்குகிறது. பள்ளியில் குழலிசைத் தேர்வு நடைபெறவுள்ளது. அதில் [...]

பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன். மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை . ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: