அறிவிப்பு - Welcome to Sramakrishnan


‘அறிவிப்பு’

சுந்தர ராமசாமி ஆவணப்படம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறித்த அரிய ஆவணப்படம் ஒன்றை ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார். நீ யார் என்ற இந்த ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் அரிய நேர்காணல், உரை, மற்றும் அவர் படைப்புகள் குறித்த பார்வைகள், அவரது இறுதி நாட்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சிறப்பான ஆவணப்படம். Nee Yaar? (Who are You?) Directed by RV Ramani | 2008 இணைப்பு https://youtu.be/a1wxroOZYxQ

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc

ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சிறுகதைகள் குறித்த உரையை வெளியிட்டுள்ளேன். இந்தப்  புதிய காணொளி தேசாந்திரி youtube பக்கத்தில் உள்ளது புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/5n8KZYy-ux0

சென்னையும் நானும் 18

கடந்த நான்கு மாதமாக லாக்டவுன் காரணமாக சென்னையும் நானும் காணொளித் தொடருக்கான படப்பிடிப்பு மேற்கொள்ளமுடியவில்லை. தற்போது மீண்டும் அந்த காணொளித் தொடர் வெளியாகியுள்ளது சென்னையும் நானும் 18 தேசாந்திரி youtube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/TyCop8ck5kI

வாழ்க்கையே கதை.

Web of Stories – Life Stories of Remarkable People எழுத்தாளர்கள். கவிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள்  எனப் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களைச் சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த தொகுப்பிது. Adam Zagajewski Jean-Claude Carrière KG Subramanyan Redmond O’Hanlon (Writer) Julia Hartwig நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. •• https://www.youtube.com/c/webofstories/playlists

Arts and ideas

The Journal of Arts and ideas மிக முக்கியமான கலை இலக்கிய இதழ். 1983ல் இருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த இதழில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நேர்காணலை முதன்முதலில் வாசித்தேன். அவர் நோபல் பரிசு பெற்றவுடனே இந்த நேர்காணல் வெளியாகியிருந்தது. இலக்கியம் சினிமா, கலை, அரசியல், பண்பாடு என இந்த இதழில் வெளியான கட்டுரைகள் யாவும் சிறப்பானவை. இந்த இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. https://dsal.uchicago.edu/books/artsandideas/

சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம்.

-MJV எஸ்.ரா அவர்களின் புத்தகத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பாகவே ஒரு சிறு பரபரப்பு எப்போதும் ஒட்டிக் கொள்வதைத் தடுக்க முடிவதில்லை. அது போன்றதொரு நிலை தான் இந்தச் சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதை தொகுப்பிற்கும் இருந்தது. சில முறை யோசிப்பதுண்டு, வேகமாக நம்மைத் தன் உலகத்தில் இழுத்து சென்று, இருத்திக் கொள்ளவும் செய்யும் புத்தகங்கள் என்ன வகையாக இருக்கும் என்று! அந்த வரிசையில் இந்தத் தொகுப்பையும் மிக விரைவில் வாசித்து முடித்தாயிற்று. கோயிந்துவும் திலிப்குமாரும், அருணகிரியும் [...]

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால [...]

புதிய சிறுகதை

செப்டம்பர் மாத காலச்சுவடு இதழில் எனது புதிய சிறுகதை லீலாவதி ஆவேன் வெளியாகியுள்ளது ••

சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்

சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான  Singapore Book Council விருது 2020 அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருது பெற்றுள்ள எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், ஹேமா இருவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். சித்துராஜ் கவிதை நாவல் என இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. **

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: