இயற்கை - Welcome to Sramakrishnan


‘இயற்கை’

இயற்கையின் குரல்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் [...]

மண் விழித்துக்கொள்கிறது

The Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை அடைந்தேன். ஒரு டாகுமெண்டரி திரைப்படம் என்பதைத் தாண்டி இயற்கையோடு இணைந்து வாழுவதற்கான ஆதார பாடம் என்றே இதனைக் கூற வேண்டும். கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் வசித்து வந்த ஜான் மற்றும் மோலி செஸ்டர் நகரவாழ்க்கையிலிருந்து விலகி புதிய  பாதையில் பயணிக்க முயன்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் வளர்ப்பு நாய் டோட். ஜான் ஒரு ஒளிப்பதிவாளர். [...]

கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய [...]

திரை எழுத்து -1

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், [...]

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. [...]

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர [...]

பசுமை உணவகம்

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க  (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான [...]

லூரே கேவன்ஸ்

இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள் நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம், பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது  இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் [...]

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி [...]

சமண நடை

மதுரையில் எனது புத்தக வெளியீட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, புத்தகக் கண்காட்சியில் நிறைய புதிய வாசகர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷம் தருவதாகயிருந்தது, சனிக்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேவதச்சனின் புதிய கவிதை நூலான இரண்டு சூரியன் வெளியானது, அது குறித்து நான் பதினைந்து நிமிசங்கள் பேசினேன், நவீன கவிதையின் இன்றைய சவால்களும் சாதனைகளையும் பற்றி காலையில் கவிஞர்கள் தேவதச்சன், கலாப்ரியா. சமயவேல். மூவருடனும் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது உற்சாகமளிப்பதாகயிருந்தது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: