இலக்கியம் - Welcome to Sramakrishnan


‘இலக்கியம்’

ஒரே மனிதன்

தி. சுபாஷிணி அவர்கள் காந்தி கல்வி நிலையத்தில் நடைபெற்ற புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றினைக் குறித்து 2011ல்  இந்தப் பதிவினை எழுதியிருக்கிறார். அதை மீள்பதிவு செய்திருக்கிறேன் •• வெங்கட் நாராயண சாலையில் தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்தினுள் “காந்தி கல்வி நிலையம் உள்ளது..  இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கே ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் [...]

மழையின் மனிதர்கள்

வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய  நாவலிது. வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது. நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் [...]

கல்பற்றா நாராயணன்

இணையத்தில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை என்று கல்பற்றா நாராயணன் கவிதை ஒன்றை நண்பர் முரளி அனுப்பியிருந்தார். மிகவும் அற்புதமான கவிதை. பிறந்தநாளைப் பற்றிய மனப்பிம்பத்தை ஒரு நொடியில் கவிதை மாற்றிவிடுகிறது. பிறந்தநாளில் விரல்களுக்கும் வயதாகுமா எனச் சிறுமி கேட்பது அபாரம்.  முல்லா கதை ஒன்றில்  தனது தலைமுடிக்குத் தன்னை விட வயது அதிகம் என்று சொல்லுவார் முல்லா. அது இக்கவிதையை வாசிக்கையில் நினைவில் வந்து போனது.  கல்பற்றா மலையாளத்தின் மிக முக்கிய கவிஞர். அவரது சுமித்ரா என்ற [...]

பறவை

பதாகை இணைய இதழில் வெளியாகியுள்ள ஸ்ரீதர் நாராயணன் கவிதை மிகச்சிறப்பாகவுள்ளது. காத்திருப்பின் தருணத்தில் தான் எத்தனை சாத்தியங்கள்.  ஜென் கவிதைகளில் செயல்படுவது போல ஒரு புள்ளியை முதன்மைப்படுத்தி கவிதை விரிகிறது. பறவையின் சிறகசைப்பை போல கவிதையும் படபடத்து எழுகிறது. வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன். •• பறவை – ஸ்ரீதர் நாராயணன் * இறக்கைகளை பறத்திக் கொண்டு விரிந்த நிலப்பரப்பில் நின்றிருக்கிறது சாம்பல் வண்ண பறவை ஒன்று தன் நிழலைப் பார்த்தபடி. பருவமாற்றத்தின் படிநிலையைக் காட்ட வலசை போகலாம். [...]

இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை

நோயல் நடேசன் . சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில் தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்;கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் என பதினைந்து கிலோ மீட்டர் நடந்து [...]

அண்டரெண்டப் பட்சி.

நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார். தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது. இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல். பெருமரங்களின் [...]

ஒரு தேவதைக் கதை

சத்யஜித்ரேயின் சாருலதா படத்தில் நடித்த மாதவி முகர்ஜி பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள இந்தப் பதிவு மிக முக்கியமானது. அவரது இணையதளத்திலிருந்து இதைப் பகிர்ந்து கொடுக்கிறேன் •• ஒரு தேவதைக் கதை கவிஞர் சுகுமாரன். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் சத்யஜித் ராய். மற்றவர் மாதவி முகர்ஜி. கோவையில் [...]

சிங்கப்பூர் கனவு.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் பயணநூல் Singapore Dream and Other Adventures: சின்னஞ்சிறிய நூல். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு ஹெஸ்ஸே மேற்கொண்ட மூன்று மாத காலப்பயண அனுபவத்தை 21 கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் மூன்று நான்கு பக்கங்களே ஆகும். 1911ல் இந்தப் பயணத்தை ஹெஸ்ஸே மேற்கொண்டிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்தவர். கேரளாவில் பணியாற்றிய கிறிஸ்துவ மிஷனரியில் இருந்தவர். அவருக்கு ஒன்பது இந்திய மொழிகள் தெரியும். அவரே [...]

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ [...]

கவிதையெனும் மாற்றுவழி.

செஸ்லாவ் மிலாஸ் (Czeslaw Milosz) தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பான A Book of luminous Things மிகச்சிறந்த புத்தகம். சர்வதேசக் கவிதைகளில் மிகச்சிறப்பானவற்றை தேர்வு செய்து தொகுத்திருக்கிறார். மிலாஸ் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் நிகரற்ற கவியாக கருதப்படுகிறவர் அவரது கவிதைத் தேர்வும் அதை வகைப்படுத்திய முறையும் இடம்பெற்றுள்ள கவிதைகளும் தனித்துவமானவை. இதுவரை தொகுக்கப்பட்டுள்ள சர்வதேச கவிதைத் தொகுப்புகளில் இது தனித்துக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.. பொதுவாக சர்வதேசக் கவிதைகளின் தொகுப்புகளைத் [...]

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: