கல்வி - Welcome to Sramakrishnan


‘கல்வி’

சிறப்பு நூலகம்

கோவை ஆர்.எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டிலுள்ளது மாவட்ட மைய நுாலகம்.  தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நுாலகப்பிரிவு இங்கே திறக்கப்பட்டுள்ளது. கோவைக்குச் சென்றிருந்தபோது நண்பர் PUCL சந்திரசேகர் அந்நூலகத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.  சந்திரசேகர், நூலகத்திற்கு தன்னார்வத்துடன்  பல்வேறு சேவைகள் செய்து வருபவர். தீவிர வாசகர். களச்செயல்பாட்டாளர். முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப்பிரிவு மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள். பிரைலி கம்யூட்டர்கள் ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், செவித்திறனை இழந்த குழந்தைகள் [...]

ஆசிரியர்களுக்கான இணையதளம்

“டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா” என்ற  இணையதளத்தை பார்வையிட்டேன்,  மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம்  பெரிதும் உதவக்கூடும் இந்த இணையதளம் தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும். ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து திறன்மிக்கவர்களாக [...]

டோட்டோ-சான்

டோக்கியோவில் இருந்த முன்மாதிரிப் பள்ளி டோமாயி . இங்கே படித்த டெட்சுகோ குரோயாநாகி தனது பள்ளி நினைவுகளை முன்னிறுத்தி எழுதிய டோட்டோ-சான் – ஜன்னலில் ஒரு சிறுமி மிக முக்கியமான சிறார் நூலாகும், ( Totto-chan, the Little Girl at the Window) ஜப்பானில் இந்தப் புத்தகம் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது கோபயாஷி என்பவர் நடத்திய இப் பள்ளி மற்ற பள்ளிக்கூடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கே வகுப்பறையாக  கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் [...]

கதை சொல்லிகள் இருக்கிறார்களா

சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், ஒரு மாணவன் எழுந்து தமிழ்நாட்டில் கதைசொல்லி என யாராவது இருக்கிறார்களா எனக்கேட்டான், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன், என் பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் அமர்ந்துவிட்டான், ஆனால்  ஏன் அப்படி [...]

திருத்தப்பட வேண்டியவர்கள்

சென்ற மாதம்  சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற  அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன், அன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம்,  ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார்,  அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார், [...]

சொன்ன கதை

குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு அற்புதமான கலை, சமீபத்தில் சுட்டிவிகடன் இதழ் சார்பில் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு கதை சொன்னேன், பெரும்பான்மைச் சிறுவர்கள் வீட்டில் யாரும் கதை சொல்லி கேட்டதேயில்லை என்றார்கள், ஒணான், மண்புழு, ரயில்பூச்சி, ஆந்தை, மீன்கொத்தி,  என எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, அதைவிடவும் மாணவர்களில் பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தமிழில் தெரியவில்லை, இனிப்பு என்று சொன்னால் என்னவென்று ஒரு சிறுமி கேட்டாள்,  ஸ்வீட் என்று சொன்னால் தான் அவளுக்குப் புரிகிறது, [...]

வெறும்கால்வாசிகள்

மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது, எப்படி [...]

சிறியதே அழகு

Man is small, and, therefore, small is beautiful. டாக்டர் ஈ.எப்.ஷுமாஸர் எழுதிய Small is Beautiful உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்று, தற்போது அந்நூல் சிறியதே அழகு எனத் தமிழில் எதிர்வெளியிடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, யூசுப் ராஜா  மொழியாக்கம் செய்திருக்கிறார் சரளமான மொழிபெயர்ப்பு, அச்சில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள், பக்கம்மாறியிருப்பதும்,  ஒரு பக்கம் அச்சிட்டது மறுபக்கம் தெரிவதுமாக உள்ளது, இதற்காகவே முதல்தடவை வாங்கிய பிரதியை கடையில் கொடுத்து வேறு பிரதி மாற்றி வாங்கினேன், [...]

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று. பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் [...]

என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம், கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும், ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு [...]

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: