சிறுகதை - Welcome to Sramakrishnan


‘சிறுகதை’

காகிதப்பறவைகள்

புதிய சிறுகதை •• உண்மையான பறவைகளை விடவும் காகிதத்தில் செய்த பறவைகள் கூடுதல் வசீகரமாகியிருக்கின்றன. அவை வீட்டிற்குள் பயமின்றி  பறக்கின்றன. காகித பறவைகளின் வானம் வீட்டுக்கூரை தானே. தபால்கார மார்டினின் மூத்தமகள் ஸ்டெல்லா அழகாகக் காகிதப்பறவைகள் செய்வாள். அவளுக்குத் திக்குவாய் என்பதாலும் மனவளர்ச்சி அடையவில்லை என்பதாலும் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில் சமையல் வேலைக்குத் துணையாக இருந்தாள். தாயற்ற பெண் என்பதால் அவளை  மார்டின்  கண்டிப்பதில்லை. பகல் நேரங்களில் அவள் வண்ண காகிதங்களை வெட்டி காகிதப்பறவைகள் செய்வாள். சில [...]

சிற்றிதழ்

-  சிறுகதை •• கதவைத் தட்டும்போது அப்படியொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம்.  மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை.  தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது. “வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருக்கு. கதவைத் திறந்து தொலைம்மா’’ என்று உள்ளிருந்து கனத்த ஆண் குரல் கேட்டது. அடுத்த சில நிமிடத்தில் பச்சைக் கட்டம் போட்ட சேலை கட்டிய வயதான பெண் [...]

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

காலச்சுவடு இதழில் வெளியான எனது புதிய சிறுகதை. ** வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஒவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். மணலின் நடனம் என்று பெயரிப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கை பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912 முதல் 1919 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஒவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்து கொள்ள [...]

சைக்கிள் கமலத்தின் தங்கை

திருவல்லிக்கேணிக்குள் ஒராயிரம் சந்துகள் இருக்கின்றன. எந்தச் சந்திற்குள் கவிஞர் ஞானக்கூத்தன் வீடிருக்கிறது என அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருமுறை பைகிராப்ட் சாலையிலுள்ள நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்த போது அருகில் ஞானக்கூத்தன் ஒரு ஆங்கிலப்புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டிருப்பதை நாதன் கவனித்தான். அவர் ஞானக்கூத்தன் தானா?. அவரது கவிதைகளை வாசித்தவன் என்ற முறையில் அவரோடு பேச விரும்பினான். ஆனால் எப்படிப் பேசுவது. எவ்விதம் தன்னை அறிமுகம் செய்து கொள்வது எனத் தெரியவில்லை. நாதனுக்குத் திக்குவாய். சிறுவயதிலிருந்தே [...]

மின்சார மனிதன்

புதிய சிறுகதை அப்போது எனக்கு வயது பனிரெண்டு. எங்கள் ஊருக்கு ராயல் சர்க்கஸ் வந்திருந்தது. ஜவகர் மைதானத்தில் தான் கூடாரம் அமைத்திருந்தார்கள். அந்தச் சர்க்கஸிற்கு ஒரு காண்டாமிருகம் வந்திருந்தது. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த காண்டாமிருகத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காகவே நான் சர்க்கஸ் போக ஆசைப்பட்டேன். வேறு எந்த மிருகத்தையும் விடக் காண்டாமிருகமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரும்புக் கவசம் போன்ற அதன் உடல் அமைப்பும் ஒற்றைக் கொம்பும் உடலுக்குப் பொருந்தாத குரலும் காண்டாமிருகத்தின் மீது தனியானதொரு [...]

அம்மாவின் கடைசி நீச்சல்

புதிய சிறுகதை ( அச்சில் வராதது) அம்மா நீந்தக்கூடியவர். நாங்கள் தெக்குடி என்ற சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து தென்பக்கமாகச் செல்லும் சாலை வழியாகச் சென்றால் ஏரியை அடையலாம். மிகப்பெரிய ஏரியது. பாண்டிய மன்னர் காலத்தில் உருவாக்கியது என்றார்கள். அந்த ஏரியைச் சுற்றிலுமாக மூன்று கிராமங்கள் இருந்தன. கிராமத்து விவசாயிகள் ஏரி தண்ணீரையே விவசாயத்திற்குப் பயன்படுத்தினார்கள். ஏரியின் நடுவில் சிறிய திட்டுப் போலிருக்கும். அதில் நீராட்சியம்மன் கோவில் இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை நீராட்சி அம்மனுக்கு [...]

பப்புவின் காலணி

புதிய சிறுகதை.  (அச்சில் வெளிவராதது.) “பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள். மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது “அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய [...]

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. [...]

புறாப்பித்து

- சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். [...]

திருடனின் மூன்று அற்புதங்கள்.

சிறுகதை இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்டு. மதராஸில்  அவனுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒருவர் கூடக் கிடையாது. அதைப்பற்றி நினைக்கும் போது தெக்கன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனது மனதில் இப்படித் தோன்றும் “திருடனுக்கு எதற்குத் தெரிந்த மனிதர்கள்“ ஆம். தெக்கன் திருடுவதற்காகத் தான் மதராஸிற்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பு வரை பழனி, [...]

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: