பரிந்துரை - Welcome to Sramakrishnan


‘பரிந்துரை’

தேவியின் திருப்பணியாளர்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணியாளர்கள் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் கிரிஸ் புல்லர். இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மீனாட்சியம்மன் கோவிலைப் பல்வேறு காலகட்டங்களில் கள ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த ஆய்வேடு தமிழில் வெளியாகியுள்ளது. தேவியின் திருப்பணியாளர்கள் என்ற நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் சி. நாகராஜபிள்ளை. மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு [...]

சில இணைப்புகள்

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் கதையை மையமாக கொண்ட படம் Current (1992 Classic Hindi Movie) https://youtu.be/SILuGo-tEPI Gautama Buddha.avi https://youtu.be/G7fKVRfCNyY Dr Babasaheb Ambedkar https://youtu.be/IfgTP5J2FhY Ardh Satya (1983) – Govind Nihlani https://youtu.be/Xh4K0WN3nv0 Piravi (1988) – Malayalam Movie https://youtu.be/6sZ-iyQ733A Thaniyavarthanam https://youtu.be/oQG4QEwtKYE Ponthan Mada https://youtu.be/IvYybu2eyGs Subah (1984) – Jabbar Patel https://youtu.be/dnqu-TPBzAA Sparsh (1980) – Sai Paranjape https://youtu.be/M-YZAjMk6VM DISHA https://youtu.be/jNgM_Ovxnq4 Bangarwadi https://youtu.be/AwTHmmLuM3k Do [...]

வாசிப்போம் வாருங்கள்

ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய  எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு  சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,  அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் [...]

100 சிறந்த புத்தகங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சியில் நான்  குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும்  முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும்  ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும் இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என [...]

புத்தகப் பரிந்துரை

சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை. 1)      இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு [...]

கணிதமேதையைப் பற்றிய பாடல்

கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது, இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம் ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல் இது. https://www.archive.org/details/Ramanujan

கதை கேளுங்கள்

தமிழ் ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய முயற்சியது இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற சிறுகதையைச்  சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் [...]

மரங்கள்

நேற்று மரங்கள் என்ற 16 பக்கமுள்ள சிறுவெளியீடு ஒன்றினை ஒசூர் நண்பர் பாலசுந்தரம் அனுப்பியிருந்தார். இரவில் வாசித்தேன்.  மரங்களை முதன்மை படுத்திய அழகான சிறுதொகுப்பு . மிக  நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது. இது போன்ற வெளியீடுகளை நண்பர்கள் சுட்டிக்காட்டாமல் போயிருந்தால் தவறவிட்டிருப்பேன். நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் மரங்கள் பற்றிய உரைநடைக் கவிதையை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருப்பவர் கதிரவன். இத்தொகுப்பு மரங்களைப் பற்றி கல்யாண்ஜி. தேவதச்சன் இருவரது ஒரு கவிதையும் உள்ளடக்கியதாக [...]

புத்தக பரிந்துரை

கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது.  வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு  சிபாரிசு செய்கிறேன்.  இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன.  இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எண்ணும் மனிதன்  – மல்பா தஹான் -அகல்  வெளியீடு. [...]

குளிர்காலப் புத்தகங்கள்

குளிர்காலம் புத்தகம்படிப்பதற்கு மிகவும் உகந்த காலம். வேறு எப்போதையும் விட கையிலிருந்த புத்தகம் குளிர்ந்த இரவுகளில் நம்மோடு மிக நெருக்கமாகவிடுகிறது.வார்த்தைகள் தரும் வெம்மை அலாதியானது. சொற்கள் மிக நெருக்கமாக தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் நட்புடன் நம்மோடு பேசுகின்றன. மூடிய ஜன்னலின் வெளியே குளிர்காற்று அலைந்து கொண்டிருக்கிறது. புத்தகங்கள் குளிர்காலத்தில் துளிர்க்க துவங்குகின்றன. அதன் பசுமையும் அலைவும் மிக வசீகரமாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாசிப்பதற்கு போதுமான வெளிச்சத்தில் படிப்பது அலாதியான அனுபவம். எப்போதும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதற்கான [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: