கவிதை

இருளும் யானையும்

மனுஷ்யபுத்திரனின் இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன் எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream” என்ற ஒவியம் நினைவில் வந்து போகிறது. ஒலமிடும் அந்த மனிதனின் முகம் மறக்கமுடியாதது. அது சுயவருத்தத்தில் உருவான ஒலமில்லை. தன் கண்முன்னே உலகம் அழிவுறுவதன் அலறல். தன் இயலாமையை, தவிப்பை, இழப்பை அடையாளப்படுத்தும் குரல். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும் இதையே செய்கின்றன எளிய நம்பிக்கைகளே மனிதர்களின் பிடிமானம். அவை பொய்யென உணர்ந்த போதும் கூட அவற்றைப் பற்றிக் கொண்டே மனிதர்கள் வாழ்ந்து …

இருளும் யானையும் Read More »

எஹுதா அமிக்ஹாய்

சமகால உலகக்கவிஞர்களில் மிக முக்கியமானவர் எஹுதா அமிக்ஹாய் (Yehuda Amichai). இவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். மனஎழுச்சியூட்டும் அற்புதமான தொகுப்பு. இஸ்ரேலைச் சேர்ந்த அமிக்ஹாய் கவிதைகள் ஹீப்ரூ மொழியின் மரபான கவித்துவத்தையும் நவீனபார்வையையும் ஒன்று கலந்ததாகும். இவரது கவிதையின் தனித்துவமாக நான் கருதுவது உருவகங்கள். நவீன கவிதையுலகில் இவர் அளவிற்கு உருவகங்களைப் புதுமையாக கையாளும் ஒருவரை அறிந்ததில்லை. தினசரி வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் சமய நம்பிக்கைகளிலிருந்தும் புராணீகத்திலிருந்தும் இவர் உருவாக்கும் உருவகங்கள் கவிதையின் மினுங்கும் …

எஹுதா அமிக்ஹாய் Read More »

டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு

சம்யுக்தா மாயாவின் முதல் கவிதைத் தொகுப்பு டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு. இவரது கவிதைகள் எதையும் இதற்கு முன்பாக நான் வாசித்ததில்லை. தொகுப்பாக இவரது கவிதைகளை ஒருசேர வாசித்த போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். மிகச்சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார். இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள்.  அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன. எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று அரூப முத்து. முதல் இரண்டு …

டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு Read More »

பாஷோவின் பயணங்கள்

பாஷோ மகத்தான ஹைக்கூ கவிஞர்.  பாஷோ என்றால் ஜப்பானிய மொழியில் வாழை மரம் என்று அர்த்தம்.  All who achieve greatness in art possess one thing in common: they are one with nature எனப் பாஷோ குறிப்பிடுகிறார். இவரது ஐந்து பயணங்களின் தொகுப்பு நூலாகிய Basho’s Journey வாசித்துக் கொண்டிருந்தேன் 1684ம் ஆண்டுத் தனது சீடனுடன் ஈடோவில் இருந்து நீண்ட பயணத்தைத் துவக்கினார் பாஷோ. Uenoவில் உள்ள தனது பிறந்த வீட்டை …

பாஷோவின் பயணங்கள் Read More »

அவர்களின் கவிதை : வி.யோகேஷ்

இன்மை என்ற கவிதைக்கான இணைய இதழ் ஒன்றை கவிஞர் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார், மாதம் இருமுறை வலையேற்றம் செய்யப்படுகிறது, இந்த இணைய இதழில் சிறந்த கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் வெளியாகின்றன,  அவசியம் படித்துப்பாருங்கள் https://www.inmmai.com/p/blog-page.html •• இன்மை இதழில் வெளியான தீராத நினைவு என்ற வி.யோகேஷ் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,  கச்சிதமான, எளிமையான கவிதை. தலைப்பு ஒன்று தான் பழமையானது, ஆனால் கவிதை தரும் அனுபவம் விரிந்து கொண்டே செல்கிறது. கடந்தகாலங்களை அப்படியே …

அவர்களின் கவிதை : வி.யோகேஷ் Read More »

இக்யூவின் காதல்பாடல்கள்

ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே, ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை, இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர். வெளிப்படையாக பரத்தைகளோடு கூடி இருப்பதுடன் அவர்களை புகழ்ந்து பாடி, பாலின்பத்தை குறை கூறும் கள்ளத்துறவிகளையும் இக்யூ கேலி செய்கிறார், பௌத்த …

இக்யூவின் காதல்பாடல்கள் Read More »

கவிதை கேட்ட நரி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் மிக முக்கியமானவர் மட்சுவோ பாஷோ, அவரைப்பற்றிய Basho And The Fox என்ற புத்தகத்தைப் படித்தேன், டிம்.ஜே,மேயர்ஸ் குழந்தைகளுக்காக எழுதிய சித்திரங்களுடன் உள்ள புத்தகமது பாஷோ டோக்கியோ நகரின் புறவெளியில் இயற்கையோடு இணைந்தபடி சிறிய குடிலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பாஷோ என்பதற்கு வாழைமரம் என்று தான் பொருள், அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு செர்ரி மரமிருந்தது, இந்த மரத்தடியில் அமர்ந்தபடியே அதன் பூக்களை ரசிப்பது பாஷோவிற்கு பிடித்தமான …

கவிதை கேட்ட நரி Read More »

பிடித்த கவிதை

சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இக்கவிதை, இதை எழுதியவர் என்.விநாயக முருகன், நவம்பர் 2010 சொல்வனம் இணைய இதழில் வெளியாகி இருக்கிறது இந்தக் கவிதையின் குரலும் சிறுவனின் அகச்சித்திரமும் அற்புதமாக வெளிப்பட்டிருகிறது சமகாலத் தமிழ் கவிதையில் ஒரு புதிய பாய்ச்சலாகவே இக்கவிதையைக் கருதுகிறேன் விநாயகமுருகனின் குஞ்சுண்ணி கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன, அவற்றை அவரது வலைத்தளத்தில் படியுங்கள் விநாயக முருகன் வலைத்தளம் https://nvmonline.blogspot.com/ கலைஞன் ————- இறைச்சிக்கடையொன்றில் உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு உண்மையில் அதுதான் …

பிடித்த கவிதை Read More »

கவிதையில் நுழைந்த திருடன்

திருடன் விட்டுச் சென்றிருக்கிறான் நிலவை என்னுடைய ஜன்னலில், என்ற ரியோகானின் ஜென்கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும் போது நிலவை விடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஜென் கவிதையுலகின் மாஸ்டர்களில் முக்கியமானவர் துறவி ரியோகான், 1758ல் ஜப்பானின் இசிகோ பகுதியில் பிறந்தவர், இளவயதிலே பௌத்த துறவியாகி அலைந்து திரிந்தவர், இவரது மூன்று கவிதைகளில் திருடன் வருகிறான், பௌத்த நீதிக்கதைகளில் வரும் திருடனைப்போலவே தான் இவனும் இருக்கிறான், இந்தக்கவிதையை ஆழ்ந்து வாசிக்கையில் யார் அந்தத் திருடன் என்ற கேள்வி …

கவிதையில் நுழைந்த திருடன் Read More »

உலகம் ததும்பும் ஒசை

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக  தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை, பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது  ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் …

உலகம் ததும்பும் ஒசை Read More »