காமிக்ஸ்

தனிமையெனும் தீவு

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது. வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது. மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் …

தனிமையெனும் தீவு Read More »

இரும்புக்கை மாயாவி

பள்ளிநாட்களில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன. முத்துகாமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகன் என்ற முறையில் இவற்றை மீண்டும் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக நேற்றிரவு இரும்புக்கை மாயாவியின் நாச அலைகளை வாசித்தேன். முதல்முறையாகப் படித்த போது அடைந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருப்பது வியப்பளித்தது. இரும்புக்கை மாயாவி பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். புத்தரின் கார்டூன் மொழி என்ற அச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் தொகுதி 1 ல் …

இரும்புக்கை மாயாவி Read More »

சத்ரபியின் காமிக்ஸ் உலகம்

மர்ஜானே சத்ரபியின் (Marjane Satrapi) சிக்கன் வித் பிளம்ஸ் கிராபிக் நாவலை சென்ற ஆண்டு டெல்லி புத்தகக் கண்காட்சியின் போது வாங்கி வாசித்தேன்,  தற்போது அது திரைப்படமாக வெளியாகி உள்ளது, வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் விலகி மாறுபட்ட உருவாக்கதில் வெளியாகியுள்ள இப்படம் காமிக்ஸ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடியது. இப்படம்  நஸர் அலி கான் என்ற தோல்வியுற்ற இசைக்கலைஞரைப் பற்றியது, தனது வயலின் உடைந்து போனதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறார், படக்கதை அவரது காதலை, …

சத்ரபியின் காமிக்ஸ் உலகம் Read More »

புத்தனின் சித்திரக்கதை

ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka)  இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான் ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள். மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் …

புத்தனின் சித்திரக்கதை Read More »

தமிழ் காமிக்ஸ்

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ள நண்பர் அருண் புத்தக கண்காட்சியினுள்  காமிக்ஸ்  பிரதிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார். . நூற்றுக்கும் மேற்பட்ட பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. காமிக்ஸ் ப்ரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். கடை எண்.  P 5.  INFO MAPS   அருண் அலைபேசி எண் :   9790788931.

கனவெங்கும் காமிக்ஸ்.

கையில் கிடைத்த வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள், மற்றும் புகைப்படங்களை வெட்டி எடுத்து அதை ஒரு நோட்டில் படக்கதை போல ஒட்டி ஒவ்வொன்றின் மேலும் சிறிய சிறியதாக ஸ்கெட்ச் பென்சிலில் எழுதி நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்த போது எனது வயது பதினைந்து.அந்த வயதில் என் உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதிலும் இரும்புக்கை மாயாவியை போல ஆவது என்பது மட்டுமே வாழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. உடல் மறைந்து போய் கைமட்டும் தனியே …

கனவெங்கும் காமிக்ஸ். Read More »

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ்.

இரும்புக்கை மாயாவி, வேதாளம்,டின்டின், என்று காமிக்ஸ் புத்தகங்களை தேடித் தேடி படித்தவன் நான். இன்றைக்கும் அந்த ஆர்வம் குறையவேயில்லை. சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சில மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக சாது என்ற புதிய காமிக்ஸ் புத்தகத்தை லேண்ட்மார்க்கில்  வாங்கி வந்தேன். மிகசிறப்பாக இருந்தது.  யார் இதை உருவாக்குகிறார்கள் என்று தேடிப் படித்த போது  பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் தான் இந்த …

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ். Read More »