ஆளுமை - Welcome to Sramakrishnan


‘ஆளுமை’

உஸ்தாத் இல்லம்

- கவிஞர் சுகுமாரன். காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன். அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது. சுவர்களில் [...]

அண்டரெண்டப் பட்சி.

நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார். தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது. இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல். பெருமரங்களின் [...]

சௌடையாவின் குரல்.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது. அதில் சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்கத் தருவார்கள். சில நேரம் கதையை ஆசிரியரே படித்துக் காட்டுவார். நாங்கள் கேட்பதுண்டு. அழவள்ளியப்பா எழுதிய ஈசாப் கதைகளின் பாடல் வடிவம் மிகவும் பிரபலமானது. ஆசிரியர் அதை அழகாகப் பாடுவார். ஒட்டுமொத்த வகுப்பறையும் அந்தப் பாடலைப் பாடும். நீதிபோதனை வகுப்பு பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மதியம் தான் இருக்கும். ஆகவே அன்று பள்ளி முடிந்தபிறகும் மாணவர்கள் மைதானத்திலிருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்போம்.தப்பியோடிய [...]

மாஸ்கோ நினைவுகள்

கல்வியாளர். நெ.து.சுந்தர வடிவேலு இரண்டு முறை சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைச் சோவியத் மக்களோடு, நான் கண்ட சோவியத் ஒன்றியம் என இரண்டு பயண நூல்களாக எழுதியிருக்கிறார். இரண்டும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது. இன்றைய தலைமுறைக்குச் சோவியத் ஒன்றியம் பற்றியோ அதன் வாழ்க்கை முறை குறித்தோ அதிகம் தெரியாது. அவர்கள் இந்த நூலை வாசித்தால் நிச்சயம் வியந்து போவார்கள். இந்தியாவிலிருந்து சோவியத் சென்று வந்த எழுத்தாளர்கள் பலரும் தனது பயண அனுபவத்தை நூலாக்கியிருக்கிறார்கள். [...]

உலகம் சுற்றிய மனிதர்.

அறிவியல் மேதை ஜி டி நாயுடு எழுதிய நான் கண்ட உலகம் என்ற பயணக்கட்டுரை நூலை வாசித்தேன். இணையத்தில் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது. இலங்கையிலிருந்து கிளம்பி ஒராண்டு காலம் உலகம் முழுவதையும் சுற்றிவந்திருக்கிறார் ஜி.டி நாயுடு. இது போல நான்கு முறை வேறுவேறு பயணங்கள். ஒவ்வொன்றும் பலமாத காலங்கள். இந்தப் பயணத்தில் தனக்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பயணநூல். குறிப்பாக அவர் இலங்கையிலிருந்து பயணம் செய்த பிரெஞ்சு கப்பல் பாதிக்கடலில் [...]

கசாக்கின் நினைவில்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஒ.வி. விஜயன் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறிய பசுமையான கிராமம். அந்த ஊரினை மையமாகக் கொண்டு தான் விஜயன் தனது புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம் நாவலை எழுதியிருக்கிறார். அந்த நினைவைக் கொண்டாடும் விதத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களைச் சிற்பங்களாகவும் ஒவியமாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊரின் நுழைவாயிலில் வழியம்பலம் என நாவலில் ரவி வந்து இறங்குமிடம் அழகான வளைவு கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் [...]

இடக்கை – பவா பெருங்கதையாடல்

எனது இடக்கை நாவல் குறித்து நண்பர் பவா.செல்லத்துரை மதுரையில் சிறப்பான கதைசொல்லுதலை  நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் முக்கியப்புள்ளிகளைத் தொட்டுப் பேசி கேட்பவர்களை இந்நாவலை வாசிக்கும்படி தூண்டியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. நவீன கதைசொல்லியாக பவா தமிழ் இலக்கியத்தின் முக்கியச் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கதை சொல்லும் விதம் ஒரு நண்பன் நேரில் நம்மிடம் பேசுவது போல அத்தனை நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் பவா. நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் [...]

எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார். நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற [...]

என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார். இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் [...]

செசானும் எமிலி ஜோலாவும்

வாழ்வில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்துவிடுகிற விஷயமில்லை. அதுவும் இரண்டு நண்பர்களில் ஒருவன் பெயரும் புகழும் அடைந்த பிறகு மற்றவன் வெறும் ஆளாக, எந்த அங்கீகாரமும் வருமானமின்றி இருக்க நேரிடும் எனில் அவர்களுக்குள் உள்ள உறவில் கசப்பே மிஞ்சும். சிலரது மேதமை அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடையும் போது தான் அறியப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வான்கோ வாழ்ந்த போது அவரது ஒரு ஒவியம் கூட விற்பனையாகவில்லை. பணமில்லாமல் அவதிப்பட்டார். இன்று ஒரு ஒவியத்தின் விலை ஐநூறு கோடிக்கும் மேல். [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: