திரை எழுத்து - Welcome to Sramakrishnan


‘திரை எழுத்து’

சலீம்-ஜாவேத்

ஹிந்தி திரையுலகின் பிரபல திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் பற்றி DIPTAKIRTI CHAUDHURI எழுதிய WRITTEN BY SALIM JAVED என்ற புத்தகத்தை வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமான நூல். ஹிந்தி சினிமாவின் முக்கிய இயக்குநர்கள்,  பிரபல நடிகர்கள் பற்றிப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அதன் முக்கியத் திரைக்கதையாசிரியர்களான குல்சார் , கே. ஏ. அப்பாஸ், ராஜேந்தர் கிஷன். விஜய் டெண்டுல்கர், ராஜேந்தர் சிங் பேதி, வி.பி. சாதே. சத்யன் போஸ், சச்சின் பௌமிக், காதர்கான், இந்தர் ராஜ் ஆனந்த் [...]

திரை எழுத்து- 3 சிட்னி லூமெட்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் சிட்னி லூமட் எழுதிய Making Movies அவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைக்கலையின் நுட்பங்களை விவரிக்கக் கூடியது. சிட்னி லூமட் இயக்கிய 12 Angry Men (1957), Serpico (1973), Dog Day Afternoon (1975), Network (1976) and The Verdict (1982) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வந்தால் ஒரு போதும் மறுத்துவிடாதீர்கள். உங்களது தயக்கங்கள் யாவும் தேவையற்றவை. சினிமா ஒரு கூட்டு உழைப்பு. [...]

திரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை

ஒரு திரைக்கதை எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அகிரா குரசேவாவின் திரைக்கதையாசிரியர் ஷினோபு ஹஷிமோடோ எழுதிய Compound Cinematics: Akira Kurosawa and I என்ற புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். இந்நூலின் வழியே அகிரா குரசேவா எவ்வாறு திரைக்கதையை எழுதுகிறார் என்பதை அறிந்து கொள்வதுடன் அவருடன் இணைந்து பணியாற்றிய திரைக்கதையாசிரியர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள் என்பதையும் துல்லியமாக அறிந்து கொள்ளமுடிகிறது. அகிரா குரசேவாவின் ரஷோமான் படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் ஹஷிமோடோ . [...]

திரை எழுத்து -1

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: