காந்தியின் நிழலில் - Welcome to Sramakrishnan


‘காந்தியின் நிழலில்’

காந்தியின் நிழலில் 5 ஏன் என்ற கேள்வி

காந்தியின் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஹென்றி போலக். காந்தியோடு சிறை சென்றவர்.  அவரது மனைவியான மிலி கிரகாம் போலக் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஹென்றி போலக்கை திருமணம் செய்து கொண்டபின்பு தென்னாப்பிரிக்கா வந்தார். 1931ல் மிலி கிரகாம் போலக் காந்தி எனும் மனிதர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இது காந்தியோடு பழகிய நட்பினையும் பீனிக்ஸ் பண்ணையில் வாழ்ந்த நாட்களையும் விவரிக்கும் நூல். கார்த்திகேயன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.மதுரை சர்வோதயா இலக்கியப்பண்ணை வெளியிட்டிருக்கிறது. ஆசிரம வாழ்க்கைக்குப் புதியவரான மிலிக்கு வாழ்வின் [...]

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும்.

1909 அக்டோபர் 1ம் தேதி லண்டனிலிருந்து டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதும் போது காந்தியின் வயது 40. அப்போது டால்ஸ்டாயின் வயது 81. டிரான்ஸ்வாலில் நடக்கும் காலனிய ஒடுக்குமுறைகளை டால்ஸ்டாயிற்குக் கவனப்படுத்த வேண்டும் என்பதுடன் அவரது A Letter to a Hindu என்ற கடிதத்தை மொழியாக்கம் செய்து வெளியிடும் உரிமையைப் பெறவே காந்தி கடிதம் எழுதுகிறார். காந்தியின் கடிதம் போல உலகெங்குமிருந்து அன்றாடம் நாற்பது ஐம்பது கடிதங்கள் டால்ஸ்டாயிற்கு வருவது வழக்கம். கடிதங்களைப் படித்துப் பதில் எழுதுவதற்கென்றே [...]

காந்தியின் நிழலில் -3 சந்தேகத்திற்கு அப்பால்

கனஸ்யாமதாஸ் பிர்லா எழுதிய காந்தி குறித்த நூல் பாபூ அல்லது நான் அறிந்த காந்தி என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. அதன் முன்னுரையில் காந்தியை நான் அறிந்து கொள்ளத்துவங்கிய போது திலகருக்கு நிகராக அவருக்கும் பெயரும் புகழும் வருகிறதே என அவரைச் சந்தேகித்துக் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே பழகத் துவங்கினேன். ஆனால் அந்த நட்பு மிக ஆழமானதாக உருவெடுத்துவிட்டது என்கிறார் காந்தியைச் சந்தேகிப்பவர்கள், குறைகளைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்ய விரும்புகிறவர்கள் எப்போதுமிருக்கிறார்கள். அவர்கள் காந்தியை அறியும் [...]

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சத்திய சோதனையைத் தான் முதலில் வாசிப்பார்கள். காந்தியின் வாழ்க்கையைப் பற்றி வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம், பிரஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகம் இரண்டும் முக்கியமானது. இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என மொழியாக்கம் செய்திருக்கிறார், தற்போது ராமச்சந்திர குகா காந்தியின் வாழ்க்கையை மிக விரிவான இரண்டு பகுதி கொண்ட நூலாக எழுதியிருக்கிறார். லூயி ஃபிஷர் எழுதிய காந்தி [...]

காந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.

காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் காகா காலேல்கர். தண்டி யாத்திரைக்குச் செல்லும் போது காந்தி ஒரு ஊன்றுகோலை ஊன்றியபடியே செல்லும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஊன்றுகோல் காகா காலேல்கருடையது. அவர் தான் நெடும்பயணம் செல்லும் காந்திக்குத் தனது ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார். காகா காலேல்கருக்கு அந்த ஊன்றுகோல் அவரது நண்பரான கோவிந்த் பாயால் பரிசாக வழங்கப்பட்டது. நாகப் பெட்டா என்று அழைக்கப்படும் அந்த மூங்கில் கழி நெருக்கமாக முடிச்சுகள் கொண்டது. உப்பு சத்தியாகிரகத்திற்காகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட [...]

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: