காலைக் குறிப்புகள் - Welcome to Sramakrishnan


‘காலைக் குறிப்புகள்’

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

“அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”. “நீ உன் திசையை மாற்றவேண்டிய [...]

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல்

ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சந்நியாசியும் சர்வாதிகாரியும் என்ற கட்டுரைத் தொகுப்பினை ச.து.சு.யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை ஆர்தர் கோய்ஸ்லரின் இந்த ஒரு புத்தகம் தான் தமிழில் வெளியாகியுள்ளது. பியர்ல் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த இந்த நூலில் நாவலாசிரியனின் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை எழுத்தாளன் எப்படி ஒரு நாவலை எழுத வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது. தனி மனிதன் ஒரு அறைக்குள்ளிருக்கிறான். சமூகம் வெளியே இருக்கிறது. மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து வெளியுலகைப் [...]

காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி.

ஸ்டானிஸ்லாவ் டிகாத் புகழ்பெற்ற போலந்து எழுத்தாளர், நாடக ஆசிரியர் . இவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய குறுங்கதை ஒன்றை சுகுமாரன் கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்து கொடுத்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற அந்தக் கதை மிகச்சிறப்பானது. கரமசேவ் சகோதரர்கள் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி ஏன் எழுதினார் என்பதற்கு இக் கதை ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இன்னொரு விதத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களில் ஒருவராகக் கடவுளுமிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கதையில் வரும் கடவுள் [...]

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல்.

பீட்டர் புரூக் தயாரித்த மகாபாரதம் நாடகத்தை நேரில் கண்டதில்லை. 9 மணி நேரம் நடக்கக்கூடியது. பின்பு அது தொலைக்காட்சிக்கு ஏற்ப ஆறு மணி நேரத்திற்குள் குறைக்கப்பட்டது. இந்தத் திரைவடிவத்தைப் பார்த்திருக்கிறேன். ஜீன் கிளாடே கேரியர் தான் இதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். நாடக வடிவமும் அவர் எழுதியதே. பன்னாட்டுத் தயாரிப்பில் உருவான அந்த நாடகத்தில் திளெரபதியாக நடித்தவர் மட்டுமே இந்தியர். மல்லிகா சாராபாய் என்ற பரத நாட்டியக் கலைஞர். பீஷ்மர், அர்ச்சுனன். பீமன், கிருஷ்ணர் பற்றி நமக்கு [...]

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால்

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள கவிஞர் லூயிஸ் க்லூக் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. பரிந்துரைப் பட்டியலிலிருந்த நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன எழுத்தாளர் யான் லியான்கே, முரகாமி, ஜமைக்கா கின்கைட் போன்றவர்களை வாசித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பரிந்துரையாளரும் லூயிஸ் க்லூக் பெயரைச் சொல்லவேயில்லை. நோபல் பரிசு கமிட்டி இது போன்ற திகைப்பூட்டும் ஆச்சரியங்களைத் தருவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள். ஸ்வீடிஷ் அகாடமி [...]

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து [...]

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம்

ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் திரைப்படம் ஒன்றில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துப் போகிறார்கள். அவள் தந்தையிடம் ஆசி பெறுகிறாள். அப்போது இத்தனை ஆண்டுகள் தன்னை வளர்த்து அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறாள். தந்தை அவளது எதிர்காலம் கடந்தகாலத்தை விடவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை கடந்தகாலத்தை விடவும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் இலக்கியத்தின் பணியும். அந்தத் தந்தையின் ஆசியைப் போன்ற ஒரு [...]

காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை

இயக்குநர் மணிகௌல் ஒரு நேர்காணலில் தனது படங்களுக்குச் சிறிய கதை போதுமானது. பெரிய கதையும் நிறையக் கதாபாத்திரங்களும் சிலருக்கே தேவைப்படுகின்றன என்கிறார். Uski Roti (1970) Duvidha போன்ற அவரது படங்களே இதற்கு உதாரணம். இதையே தான் ஹெமிங்வே சிறுகதை பற்றிய குறிப்பு ஒன்றில் வெளிப்படுத்துகிறார். குறைவான கதாபாத்திரங்கள். ஒரு சம்பவம் ஒரு நல்ல சிறுகதைக்குப் போதும். கதையின் ஆழம் தான் முக்கியமானது என்கிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவரது Killers என்ற சிறுகதை. சிகாகோவைச் சேர்ந்த [...]

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன்

800 முதல் 600 B C வரையிலான பண்டைய சீன பாடல்களின் தொகுப்பு The Book of Songs. இந்த நூலை வாசிக்கையில் சீனாவில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களும் இசையும் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் புகழ்ந்துபாடும் இந்தக் கவிதைகள் சீனப்பண்பாட்டின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளைப் போலவே சீனக் கவிதைகளுக்கும் ஒரு நீண்ட மரபிருக்கிறது. டாங் மன்னரின் வம்சம் ஆட்சி செய்த காலமே [...]

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்

தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன்  எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள். விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: