2020 August


Archive for August, 2020

அம்பின் வேகம்

பழைய திரைப்படங்களைக் காணும் போது இன்றைய ஊரடங்கு வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட உணர்வு ஏற்படுவதுடன் வேறு ஒரு காலத்தில் சஞ்சாரம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் ஏற்படுகிறது. அதுவும் சரித்திரப்படங்கள் என்றால் கூடுதல் சந்தோஷம் உருவாகிறது. இதற்காகவே பழைய பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கச் சரித்திரப் படங்களை விரும்பி பார்த்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக The Flame and the Arrow படத்தைப் பார்த்தேன். வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. Jacques Tourneur இயக்கியது. ராபின் ஹூட் கதை போன்ற [...]

காந்தியின் நிழலில் 5 ஏன் என்ற கேள்வி

காந்தியின் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஹென்றி போலக். காந்தியோடு சிறை சென்றவர்.  அவரது மனைவியான மிலி கிரகாம் போலக் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஹென்றி போலக்கை திருமணம் செய்து கொண்டபின்பு தென்னாப்பிரிக்கா வந்தார். 1931ல் மிலி கிரகாம் போலக் காந்தி எனும் மனிதர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இது காந்தியோடு பழகிய நட்பினையும் பீனிக்ஸ் பண்ணையில் வாழ்ந்த நாட்களையும் விவரிக்கும் நூல். கார்த்திகேயன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.மதுரை சர்வோதயா இலக்கியப்பண்ணை வெளியிட்டிருக்கிறது. ஆசிரம வாழ்க்கைக்குப் புதியவரான மிலிக்கு வாழ்வின் [...]

காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் சிறுகதை மிகச்சிறப்பானது. இந்தக் கதையில் வாழைத்தோட்டங்களுக்கு இடையில் கரி என்ஜின் கொண்ட ரயில் செல்லும் காட்சி வருகிறது. கொலம்பியாவின் வாழைத்தோட்டங்களுக்கு நடுவில் வளர்ந்தவர் மார்க்வெஸ். அமெரிக்காவின் வாழைப்பழத் தேவைக்காகக் கொலம்பியா, ஈக்வடார், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் யுனைடெட் புரூட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்தக் கதையில் முடிவேயில்லாத வாழைத்தோட்டங்களின் காட்சி தான் முதலில் இடம்பெறுகிறது. வாழைத்தோட்டங்களை ரயில் கடக்கும் போது காற்றில் ஈரம் பரவுகிறது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட [...]

உஸ்தாத் இல்லம்

- கவிஞர் சுகுமாரன். காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன். அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது. சுவர்களில் [...]

மழையின் மனிதர்கள்

வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய  நாவலிது. வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது. நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் [...]

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஜெல்லி மீனே ஜெல்லி மீனே – தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – jellyfish ஜெல்லி மீனே [...]

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து  மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஒரு இடையன் – தேவதச்சன்  (ஆங்கிலம்: நகுல்வசன்) – goat-herd ** ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு [...]

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1

பதாகை இணைய இதழில் நகுல்வசன் தேவதச்சனின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பதுடன் மொழிபெயர்ப்பின் சவால்களையும் தான் கவிதைகளை புரிந்து கொண்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். கவிதையை மொழியாக்கம் செய்வதன் சவால் குறித்து இது போல அசலாக எழுதப்பட்ட குறிப்புகள் குறைவே. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து இந்த மொழியாக்கம் மீள்பதிவு செய்யப்படுகிறது •• குருட்டு ஈ / [...]

சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்

சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான  Singapore Book Council விருது 2020 அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருது பெற்றுள்ள எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், ஹேமா இருவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். சித்துராஜ் கவிதை நாவல் என இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. **

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும்.

1909 அக்டோபர் 1ம் தேதி லண்டனிலிருந்து டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதும் போது காந்தியின் வயது 40. அப்போது டால்ஸ்டாயின் வயது 81. டிரான்ஸ்வாலில் நடக்கும் காலனிய ஒடுக்குமுறைகளை டால்ஸ்டாயிற்குக் கவனப்படுத்த வேண்டும் என்பதுடன் அவரது A Letter to a Hindu என்ற கடிதத்தை மொழியாக்கம் செய்து வெளியிடும் உரிமையைப் பெறவே காந்தி கடிதம் எழுதுகிறார். காந்தியின் கடிதம் போல உலகெங்குமிருந்து அன்றாடம் நாற்பது ஐம்பது கடிதங்கள் டால்ஸ்டாயிற்கு வருவது வழக்கம். கடிதங்களைப் படித்துப் பதில் எழுதுவதற்கென்றே [...]

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: