2020 September


Archive for September, 2020

காதலின் நிழல்.

காஸபிளங்கா படத்தை இருபது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். மைக்கேல் கர்டிஸ் இயக்கி 1942 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பெர்க்மேன் மற்றும் பால் ஹென்ரிட் ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்றிரவு திரும்பும் காஸபிளாங்கா பார்த்தேன். பழைய போட்டோ ஆல்பங்களைத் திரும்பப் பார்க்கும் போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் தரும் அனுபவமது. பிரிந்த தனது காதலியை மறுபடியும் சந்திக்கும் ஒருவனின் கதை சினிமாவில் என்றும் அழியாதது. அதுவும் காதலி உதவி கேட்டு நிற்கும் சூழலும் அவளுக்காகக் காதலன் [...]

சுதிர் மிஸ்ரா

இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்.. சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார். ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய [...]

காகிதப்பறவைகள் குறித்து

இலக்கிய அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடும் நண்பர்கள் குழுவாக அசைவு உருவாக்கபட்டிருக்கிறது அசைவு இலக்கிய விவாதக் குழு நண்பர்கள் இம்முறை விவாதத்திற்கு எனது சிறுகதை காகிதப்பறவைகளைத் தேர்வு செய்து உரையாடியிருக்கிறார்கள். காகிதப்பறவைகள்  குறித்து விவாதித்த கருத்துக்கள் தொகுத்து கீழே பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. அசைவு இலக்கிய விவாதக்குழு நண்பர்கள் ம.கண்ணம்மாள், க.விக்னேஷ்வரன், சரவணன் மாணிக்க வாசகம், சுஷில் குமார், சக்திவேல், சுஜா, நவீன், காயத்ரி, பால ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் [...]

இசையால் வென்றவர்.

நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது. நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும்  பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள். நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு [...]

ஜானகிராமனின் ஜப்பான்.

எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன் தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம் இணைப்பு: https://youtu.be/9UFRomzf3LY

காந்தி சிறுகதை

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திர ஜோதி ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. இதனை சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியை சேர்ந்த ஜி. பாலாஜி. இந்தக் கதையை வாசித்துவிட்டு ஆந்திராவிலிருந்து நிறைய பாராட்டு செய்திகள் மின்னஞ்சலில் வந்தவண்ணம் இருக்கின்றன. கடப்பா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு டாக்டர் தன் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை படித்ததில்லை என்று சிறந்த பாராட்டுரை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  இன்னொரு மொழியில் எனது கதை இத்தனை தீவிரமாக வாசிக்கபட்டு [...]

இரண்டு ஆவணப்படங்கள்

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீர் குறித்த ஆவணப்படம். பஷீரின் கதைகள் மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. பஷீரின் வீடு. அவரது மனைவியின் நேர்காணல், பஷீர் குறித்த நாடகம் என நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம் My Name Is Basheer https://youtu.be/9-Tm24XRRCE ••• குஞ்ஞுண்ணி  மலையாளத்தின் முக்கியக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னஞ்சிறிய கவிதைகளின் மூலம்  அற்புதமான கவித்துவ அனுபவங்களை வெளிப்படுத்தியவர். அவரது [...]

வடக்கன் வீரகதா

ஒரு வடக்கன் வீரகதா படம் பார்த்தேன். முன்னதாக நான்கு முறை பார்த்திருந்த போதும் படம் சுவாரஸ்யமாகவே இருந்தது. சில படங்கள் காலத்தை வென்று ஒளிரக்கூடியவை. அதில் ஒன்று ஒரு வடக்கன் வீர கதா. கதை 16 ஆம் நூற்றாண்டின் வடக்குக் கேரளாவில் நடக்கிறது. சதியன் சந்து என்று அறியப்படும் சந்துவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி அவன் தரப்பு நியாயங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறார். வரலாற்றில் ஒருவன் துரோகியாகச் சித்தரிக்கப்படுவதற்கு இப்படியும் காரணமிருக்கலாம் என்பது [...]

உடைவாள்

சிறுகதை. கைகளால் அல்ல வாளால் கதவை தட்டிக் கொண்டிருந்தான் மாயநாதன். துருப்பிடித்த வாளது. குடையைக் கையில் எடுத்துச் செல்வது போல எங்கு சென்றாலும் அவன் பெருவாள் ஒன்றை கையோடு தூக்கிக் கொண்டு அலைந்தான். மிக நீண்ட வாளது. “நான் உன்னைக் கொல்லணும். ராமண்ணா கதவைத் திற“ என்ற அவனது குரல் உரத்துக் கேட்டது “நான் தூங்கிட்டேன். நாளைக்கு வா“ எனச் சப்தமிட்டேன் “இல்லை. நான் உன்னை இப்போ பாக்கணும்.. நீ கதவைத் திறக்காட்டி.. பக்கத்து வீட்டுக் கதவை [...]

இலக்கியச் சிந்தனை பரிசு

எனது சிறுகதை சிற்றிதழ் 2019ம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனை பரிசு  பெற்றுள்ளது. இந்தக் கதை ஆனந்தவிகடனில் வெளியானது. ஆண்டு தோறும் ஏப்ரலில் நடைபெறும் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. இந்தச் சிறுகதையை உள்ளடக்கிய 12 கதைகள் சேர்ந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். ••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug   Oct »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: