2020 September 2


Archive for September 2nd, 2020

பால்ய காலத்துச் சித்திரங்கள்

-பதின் நாவல் குறித்த விமர்சனம் கீரனூர் ஜாகிர்ராஜா •• இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் [...]

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால [...]

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தை, சகோதரன் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை வாசித்தேன். இதில் தனது 17 வயதில் தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கடிதத்தில் உள்ள அவரது வரிகள் பின்னாளில் அவரது கதையின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. ஒரு தந்தைக்கு மகன் இப்படிக் கடிதம் எழுதுவானா  என வியக்க வைக்கிறது. பிரான்ஸ் காஃப்கா தனது தந்தையின் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் பற்றி ஒரு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் [...]

புதிய சிறுகதை

செப்டம்பர் மாத காலச்சுவடு இதழில் எனது புதிய சிறுகதை லீலாவதி ஆவேன் வெளியாகியுள்ளது ••

பிஸ்மார்க்கைத் தேடி

Sink the Bismarck என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் புகழ்பெற்ற போர்க்கப்பலான பிஸ்மார்க்கை எப்படிப் பிரிட்டிஷ் கடற்படை வீழ்த்தினார்கள் என்பதை விவரிக்கும் திரைப்படம். பொதுவாக யுத்த பின்புலம் கொண்ட திரைப்படங்களின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். காரணம் கதையின் மையம் ஏதுவென முதலில் சுட்டிக்காட்டப்படுவதால் அதை நோக்கியே கதை நகரும். அப்படியான ஒரு திரைக்கதை தான் Sink the Bismarck படத்திலும் உள்ளது. இதில் கென்னத் மோர் மற்றும் டானா வின்டர் ஆகியோர் நடித்துள்ளனர், [...]

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: