2020 October 4


Archive for October 4th, 2020

அந்திமழை இதழில்

இம்மாத( அக்டோபர் 2020) அந்திமழை இதழில் தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்

சபார்டி ஜோகோ தமோனோ

விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர். அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் [...]

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர். லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக [...]

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: