2020 October 7


Archive for October 7th, 2020

சிவப்பு மச்சம்

- சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே… உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே… வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக் கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். “சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். [...]

கால் முளைத்த கதைகள்

விமர்சனம் •• தமிழக அரசின் புதிய பாடநூலில் கால்முளைத்த கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் இந்த நூலை ஆர்வமாக வாசித்து விமர்சனம் எழுதி வருகிறார்கள். இணையத்தில் நான் படித்த ஒரு விமர்சனத்தை பகிர்ந்து தருகிறேன் ••• ஆந்தைக்குத் தூங்குவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரங்கொத்தி ஒன்று [...]

புகைப்படங்களின் எதிரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே.டி.சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013ல் வெளியான இந்தப் படத்தை Shane Salerno தயாரித்திருக்கிறார் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.பெரும்பாலும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன.தமிழின் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன்.அம்ஷன்குமார் இயக்கிய ஆவணப்பபடங்களைக் குறிப்பிடலாம். சாகித்யஅகாதமியே ஆண்டு தோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.அவற்றில் [...]

காந்தி

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து [...]

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: