2020 October 8


Archive for October 8th, 2020

இயற்கையின் குரல்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் [...]

சிறுகதை குறித்து

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று பொருட்களை கொடுத்தவரிடம் ஒப்படைப்பது. பௌத்த சூத்திரங்களாலான ஒரு நூலை [...]

அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க்

என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடக்கும் வருஷோற்சவம் வருகிற 1879 – ளு ஜனவரி மீ 1 உ நமது காருண்ணிய மகாராணியாரவர்கள் இந்தியச் சக்கரவர்த்தினிப்பட்டம் சூடிய மகோற்சவ தினமாகையால் அதைக் கொண்டாடு நிமித்தம் அதற்கு முன் இரண்டு நாளும், விசேஷமாய் அன்றும் பீபில்ஸ்பார்க் என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடத்தப்படுகிற மகா விநோதங்களை ஒவ்வொன்றாக நடக்கும் வண்ணம் விவரித்துச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பெருகுமாதலால் அவற்றை ஒருவாறு சுருக்கித் தெரிவிக்கிறோம். மேற்கண்ட சிங்காரத் தோட்டத்தில் எப்போதும் ஜன செளக்கியத்திற்கும், [...]

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்  என்ற எனது சிறுகதை The Tenth Rasa  என்ற பென்குவின் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் லதா ராமகிருஷ்ணன். ••

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: