Day: October 27, 2020

பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன். மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை . ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி …

பூமாவின் கண்கள் Read More »

எழுத்தின் மொழி

சாகித்ய அகாதமி 2007ம் ஆண்டு முதல் பிரேம்சந்த் ஃபெலோஷிப்பை வழங்கி வருகிறது. சார்க் நாடுகளில் வாழும் ஒரு எழுத்தாளரைத் தேர்வு செய்து இந்த நல்கை அளிக்கிறார்கள். 2018ம் ஆண்டிற்கான பிரேம்சந்த் ஃபெலோஷிப் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியான ஐயாத்துரை சாந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு நான் சாகித்ய அகாதமி விருது பெற டெல்லி சென்றிருந்த போது சாந்தனைச் சந்தித்து உரையாடினேன். சென்னைக்கு அவர் வந்திருந்த போதும் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர். 50 …

எழுத்தின் மொழி Read More »