2020 October 28


Archive for October 28th, 2020

ஆர்மேனியச் சிறுகதைகள்

ஆர்மேனியச் சிறுகதைகள் நூலை வல்லிக்கண்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச்சிறந்தவை. இணையத்தில் தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/175-armeniyachchirukathaikal.pdf இந்தத் தொகுப்பிற்கு அசோகமித்ரன் எழுதியுள்ள முன்னுரை ஆர்மேனியர்களின் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து மிக நுட்பமாக விவரிக்கிறது. எவ்வளவு அரிய தகவல்கள். உண்மைகள். அசோகமித்ரனுக்கே உரித்தான நகைச்சுவை இதிலும் வெளிப்படுகிறது. அபூர்வமான முன்னுரையது. ••• “அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிறார்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிறார்கள். “ இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காகச் [...]

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

“அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”. “நீ உன் திசையை மாற்றவேண்டிய [...]

Categories
Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep   Nov »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: