2020 November 16


Archive for November 16th, 2020

எல்லை கடந்து.

17 நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் Nefta Football Club’ 2018ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Yves Piat. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ள இரண்டு சிறுவர்களைப் பற்றியதே கதை. சகோதரர்களான அவர்கள் துனிசிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் அல்ஜீரியாவின் எல்லையில் பாலைவனத்தின் நடுவில் கைவிடப்பட்ட கழுதை ஒன்றைக் காணுகிறார்கள். அந்தக் கழுதை போதை மருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவது. கழுதையில் உள்ள [...]

நூலக மனிதர்கள் 14 சார்லியுடன் ஒரு பயணம்.

9/11க்கு முன்பு வரை சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குப் போய் வருவதற்கு எந்தக் கெடுபிடியும் கிடையாது. வாசலில் ஒரு காவலர் பரிசோதனை செய்வார். அவ்வளவே. உறுப்பினர் ஆவதும் எளிதானதே. வேலையில்லாமல் சுற்றித்திரிந்த என்னைப் போன்றவர்களுக்குப் பல ஆண்டுகள் அடைக்கலம் தந்த இடம் அமெரிக்கன் சென்டர் நூலகம். அன்றாடம் அந்த நூலகத்திற்குப் போய்வருவேன். அமெரிக்கா சார்ந்த அனைத்துத் துறை நூல்களைக் கொண்ட அழகான நூலகம். நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு மிகச்சிறப்பான வசதி [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: