2020 November 17


Archive for November 17th, 2020

ஏழுதலை நகரம்

சில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் [...]

அஞ்சலி

தமிழ் பதிப்புலகின் முன்னோடி ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தரத்தில் தமிழ் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நேர்த்தியான வடிவமைப்பு. அச்சாக்கம் எனப் புத்தக உருவாக்கத்தைக் கலைப்படைப்பாக மாற்றியவர். அவர் உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி ஈடு இணையற்றது. க்ரியா பதிப்பகம் போலப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அளவுகோலை பதிப்புலகிற்கு உருவாக்கித் தந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தேர்ந்த இலக்கிய வாசகர். மிகச்சிறந்த எடிட்டர். அவரது முயற்சியின் காரணமாகவே ஆல்பெர் [...]

நூலக மனிதர்கள் 15 சாகசத்தின் பின்னால்

பள்ளி வயதில் நூலகத்திற்குச் செல்லும் போது காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று தான் முதலில் தேடுவேன். பொதுநூலகங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதில்லை. காமிக்ஸ் புத்தகம் என்பதை ஏதோ தீண்டத்தகாத பொருளாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பள்ளிச் சிறுவர்கள் முதலில் தேடுவது காமிக்ஸ் தான். அதுவும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் கிடைக்குமா என்று பரபரப்பாகத் தேடுவேன். பள்ளியின் அருகிலுள்ள பெட்டிக்கடை ஒன்றில் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பார்கள். அதை விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் அங்கேயே அமர்ந்து [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: