2020 November 21


Archive for November 21st, 2020

கனலி ஜப்பானிய சிறப்பிதழ்

இந்த ஆண்டிற்கான எனது புதிய புத்தகங்களின் தயாரிப்புப் பணிகள் காரணமாக இணையத்தில் வெளியாகும் இதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. கனலி இணைய இதழ் வெளியிட்டுள்ள ஜப்பானியச் சிறப்பிதழைத் தினமும் ஒன்றிரண்டு எனக் கடந்த பத்து நாட்களாக வாசித்தேன். கனலியின் ஜப்பானியச் சிறப்பிதழ் மிக முக்கியமான பங்களிப்பு. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள் எனச் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். மிகச்சிறப்பான மொழியாக்கங்கள். நேர்த்தியான வடிவமைப்பு. சிறுகதைகளில் என் கனவுகளின் கெண்டை மீன், கடைசிப் புகைப்பிடிப்பாளன், தூய [...]

வஞ்சிக்கும் அழகு

Bitter Rice 1949ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். Giuseppe De Santis இயக்கியுள்ளார் நேர்த்தியான ஒளிப்பதிவும் அழுத்தமான கதையும் சிறந்த நடிப்பும் கொண்ட இப்படம் காலத்தைக் கடந்து இன்றும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. இத்தாலியின் போ பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் அறுவடைக்கும் நடவு நடுவதற்கும் ஒரு ரயில் முழுவதும் பெண்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வேலையாட்களுடன் வால்டர் என்ற திருடனின் காதலியான பிரான்செஸ்கா சேர்ந்து பயணிக்கிறாள். காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே அவள் அந்தக் [...]

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்

நூலகத்திற்கு வந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பதற்காக ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்படி ஒரு பையன் அடிவாங்குவான். ஆவேசமாக நூலகத்திற்குள் வரும் அவனது மாமா அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிட்டுக் கன்னத்தில் அறைவார். அடிவாங்கிய போதும் அவன் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருப்பான். ஒரு முறை அந்தப் பையன் அடிவாங்கிய போது நூலகத்திலிருந்த பலரும் அவனது மாமாவைக் கண்டித்தார்கள். ஆனால் அவரோ “வேலையைப் போட்டுட்டு இங்கே உட்கார்ந்து பொஸ்தகம் படிச்சிட்டு [...]

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: