பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை. காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது. கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை …
சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார் ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது. லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது …
எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம். உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா. •• பெயர் : ரியா ரோஷன் வகுப்பு : ஆறாம் வகுப்பு வயது :11 இடம் :சென்னை புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் :தேசாந்திரி விலை : Rs.70 சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் …
Roald & Beatrix: The Tail of the Curious Mouse தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும், எழுத்தாளர் ரோல்ட் டாலின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை முதன்மையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோல்ட் டால், சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, மாடில்டா, தி ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற சிறார் படைப்புகளை எழுதியவர் ரோல்ட் டால் சவுத் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் நார்வேயைச் சார்ந்தவர். தொழில்நிமித்தம் …
தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை. தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம்.எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே.தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல். சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு. மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் …
சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்
நூரெம்பெர்க் வழக்கு விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமானது. ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளை விசாரிக்க நூரெம்பெர்க்கில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சர்வதேச நீதிபதிகள் முன்பாக நாஜி ராணுவ தளபதி, அன்றைய அமைச்சர்கள். உயரதிகாரிகள். நீதிபதிகள் எனப் பலரும் நீதி விசாரணை செய்யப்பட்டார்கள். இந்த விசாரணையைப் பற்றி Judgment at Nuremberg என்றொரு படம் 1961ல் வெளியானது. மிகச் சிறந்த படமிது. அந்தத் திரைப்படத்தில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை அவரை மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடிய அனைவரும் குற்றத்திற்கு உடந்தையானவர்களே. …
எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார். மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார் யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் …
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5 தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும் வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது …